விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது!!

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 10:54 [IST]
Vijay
சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரில் இந்த ஆண்டு விஜய்க்கு விருது வழங்கியுள்ளனர்.

எடிசன் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது. விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், ஆர்கே, பேபி சாரா, கோவை சரளா, மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா, இனியா, லட்சுமிராய், லட்சுமி ராமகிருஷ்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறந்த பாடலாசிரியர் விருது நா முத்துகுமாருக்கும், இசையமைப்பாளர் விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வழங்கப்பட்டது.

இந்த விருது விழாவில், விஜய் தன் படங்களில் ரஜினி பற்றிப் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிய காட்சிகளைக் காட்டினர். பின்னர் ரஜினி விருதினை அவருக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய், ரசிகர்களை ஆஹா ஓஹோவெனப் பாராட்டினார். நண்பன் படத்திலிருந்து ஒரு பாட்டுப் பாடினார்.

எல்லாம் முடிந்ததும், 'சூப்பர் ஸ்டார் ரஜினி அவார்டு வாங்கியிருக்கீங்க... அவரைப் பற்றி பேசுங்கள்' என நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிட்டி பாபு கேட்க (மகா சொதப்பல்), விஜய் ஒன்றுமே பேசவில்லை. மீண்டும் மீண்டும் பேசச் சொன்னபோது, சற்று நேரம் மவுனமாக நின்றுவிட்டு, "வரேன்!" என்று கூறிச் சென்றார்.

English summary
Vijay has got Super star Rajini award in an event held at Chennai on Sunday. Though he received the award in the name of Rajini, he refused to talk anything about Rajini!
User Comments
lurakoo lurakoo 05 Mar 2012 11:59 am
கடேசில ரஜினிய கேவலபடிடங்கலே .....
mohamed halmi 25 Feb 2012 08:11 pm
ஆஹா யங்க தளபதிக்கு ரஜினி அவார்ட் கொடுத்திருக்கு எடிசன் அவார்ட் நான் ஹாப்பி
Krishna 36 24 Feb 2012 03:00 pm
என்ன கொடுமை சார் இது... நீ நடிச்சி ஒரு வெண்கல கிண்ணம் வாங்கு பாப்போம்... முதலா...
bmk2212 21 Feb 2012 07:07 am
இந்த சினிமா ஆசிரியர்கு விஜய் மீது அப்படி என்ன கோபமோ? ஒருவரின் குணஇயல்பை இப்படி கிண்டல் அடிக்கக்கூடாது. தவிர இந்த பகுதியின் ஆசிரியர் ரஜினியிடம் எவ்வளவு பணம் வங்கினரோ? இவர் ரஜினிக்கு அடிக்கும் ஜால்ராக்கள் தாங்கமுடியவில்லை.
sre 20 Feb 2012 04:17 pm
ஹலோ சுதர்சன் விஜய்க்கு இந்த விருது மக்கள் குடுக்கும் விருது இது யாரால்லும் தடுக்கமுடியாது தளபதி range yeah வேற நீ உன்னது முடிகோ
sudhar san 14 Feb 2012 10:21 pm
இவனுக்கு எல்லாம் விருதா ??? என்ன கொடும சார் இது ...இவனுக்கு சுட்டு போட்டாலும் நடிக்க வராது!!! மற்ற நடிகர்களை பார்த்து நடிகர்வனுக்கு விருதா??? விருதுக்கு உண்டான மரியாதை போச்சு டா...
bmk2212 21 Feb 2012 07:10 am
நீ என்ன சிவாஜியா நடிப்பை பற்றி அடுத்தவர்களுக்கு கற்றுத்தர?முதலில் நாகரிகமாக எழுத கற்றுக்கொள்.
siva 23 Feb 2012 12:06 pm
எங்க நீ நடிச்சி ஒரு வெண்கல கிண்ணம் வாங்கு பாப்போம் ...போடா டுபுக்கு ...ஒருத்தர் விருது வாங்குனா பாராட்டுங்க ...சுதர்சன் சினி field சாதாரணம் கிடையாது ....விஜய் சார் இந்த நிலைமைக்கு வந்தகாரணம் அவரோட உழைப்புதான் ....
subramanian 14 Feb 2012 11:53 am
சூப்பர் ஸ்டார் பைத்தி விஜய் என்ன சொல்ல முடியும் . சூப்பர் ஸ்டார் ஸ்டார் தன், இல்லயதலபதி தளபதி தன் . ஆல் இஸ் வெள் .
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST