Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - லண்டன் அமைப்பு வழங்கியது!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது லண்டனைச் சேர்ந்த ஒன்டர்புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு.
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் விடுத்த அறிவிப்பில், "சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு நிலைகளில் கஷ்டப்பட்டு திரைப்படத் துறையில் முன்னேறி சாதனை படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
அவருக்கு எங்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளோம். இது தமிழகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருது.
இதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று வழங்கினோம். அங்கு ரஜினிகாந்த் இல்லாததால் அவருடைய மனைவி லதாவிடம் சான்றிதழை ஒப்படைத்தோம்.
நடிகர் அமிதாப்பச்சனுக்கு எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து சாதனையாளர் விருது வழங்க முடிவெடுத்துள்ளோம்.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.