லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா புகார்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 2, 2011, 12:29 [IST]
பெங்களூர்: நித்தியானந்தாவின் அந்தரங்க செயலை அம்பலப்படுத்திய அவரது முன்னாள் சீடரும், டிரைவருமான லெனின் கருப்பன், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும், அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் தான் தப்பித்ததாகவும் நடிகை ரஞ்சிதா புதிய புகாரைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூர் அருகே, ராம்நகர் காவல் நிலையத்தில் அவர் சார்பில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தாவுடன் படுக்கை அறையில் பல்வேறு சேவைகள் (வீடியோ வெளியானதும், அதில் ரஞ்சிதா செய்தவை எல்லாம் சேவை என்று கூறியிருந்தார் நித்தியானந்தா) குறித்த வீடியோவை லெனின் கருப்பன் அம்பலப்படுத்தினார். இதையடுத்து நித்தியானந்தாகவும், ரஞ்சிதாவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் நித்தியானந்தாவை ஒரு மாத தேடலுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்தனர் கர்நாடக போலீஸார். ஆனால் ரஞ்சிதா மட்டும் ஆளையே காணவில்லை.

இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்குப் பின்னர் திடீரென வெளியுலகத்திற்கு வந்தார் ரஞ்சிதா. பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று கூறினார். அத்தோடு நில்லாமல் லெனின் கருப்பன் மீதும் பல்வேறு புகார்களையும் அவர் அடுக்கினார்.

மேலும் ராம்நகர் காவல் நிலையத்திலும் ஒரு புகார் கொடுத்துள்ளார் ரஞ்சிதா.

அதில், 2010ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி லெனின் என்னிடம் வந்து, சில வீடியோக்களைக் காட்டினார். அதில் ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பிரம்ச்சாரினிகளை அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதன் வீடியோ காட்சிகளாகும்.

மேலும், என்னைப் போல ஒரு பெண், நித்தியானந்தாவைப் போன்று தோற்றமளித்த ஒருவருடன் காணப்படும் வீடியோவையும் காட்டினார்.

மேலும் அவர் என்னை ஒரு முறை கற்பழிக்கவும் முயன்றார். ஆனால் நான் கூச்சல் போடவும் அக்கம் பக்கத்தில்இருந்தோர் வந்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.

பின்னர் என்னை மிரட்டிய அவர் புகைப்படங்கள், வீடியோக்களை மீடியாவிடம் கொடுக்கப் போவதாக மிரட்டினார் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.

கற்பழிப்பு முயற்சி என்பது மிகப் பெரிய குற்றச் செயல். ஆனால் லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயன்றதாக தற்போது கூறும் ரஞ்சிதா, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்பது தெரியவில்லை. அவரும் இதுகுறித்து விளக்கவில்லை.

English summary
Actress Ranjitha, who went hiding post Nithyananda sex scandal, has come out once again with allegations against Swami Nithyananda's former aide, his driver Lenin Karuppan who released the tapes and complained of ill doings in the swami's ashram. Ranjitha on Dec 31 registered a case against Lenin and also claimed that on Feb 13, 2010, Lenin showed her some poorly shot videos of him molesting two Brahmacharinies in the ashram. Lenin also allegedly showed her some pictures of a woman resembling herself getting intimate with a person resembling Swami Nithyananda. She also charged Lenin that he tried to rape her but did not succeed as somebody arrived hearing her screams.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST