Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஏன்தான் தேவையில்லாத கிசுகிசு வருதோ? - பாலா பட நாயகி புலம்பல்

Posted by:
Published: Saturday, March 31, 2012, 12:11 [IST]

I M Still Acting Bala Movie Aid0136

பாலாவின் பரதேசி படத்திலிருந்து தான் நீக்கப்பட்டுவிட்டதாக வந்த செய்தியை மறுத்துள்ளார், ஹீரோயின் வேதிகா.

அதர்வாவை நாயகனாக வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதல் கட்ட படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்துவிட்டார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து பாலா நீக்கி விட்டதாக தகவல் வெளியானது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளைப் பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும், அவருக்குப் பதில் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதனை மறுத்துள்ளார் வேதிகா. "பாலா படத்திலிருந்து என்னை நீக்கியதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறேன். பாலா சார் படத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம். உண்மையை திரித்து என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை," என்றார்.

English summary
Recently some reports says that actress Vedhika has dropped from Bala's film Paradesi. but the actress denied those reports. 'I'm still acting in Bala sir's film', says Vedhika.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST