Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காணாமல் போன நடிகை... அதிமுக பிரமுகர் கஸ்டடியிலிருந்து மீட்பு!

Posted by:
Updated: Friday, October 12, 2012, 8:25 [IST]

சற்றேறக்குறைய ஒரு மாதம் முன்பு, காதலில் சொதப்பிய நடிகை ஒருநாள் திடீரென காணாமல் போய்விட்டாராம். பதறிப் போனார்கள் வீட்டில்... லட்சம் கோடிகளைக் கொட்டும் மகராசி காணாமல் போனால் சும்மா இருக்க முடியாதல்லவா!

தொடர்ந்து போலீஸ் துணையுடன் வலை வீசித் தேடியதில், ஒரு அதிமுக முக்கியப் பிரமுகர் வீட்டில் நடிகை அமுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்தனை சுளுவாக போலீஸ் நெருங்கமுடியாத இடம். அதிகாரத்தில் இருப்பவர் வேறு.

பின்னர் போலீசார், ரொம்ப ரொம்ப இறங்கிப் போய் பிரமுகரை கெஞ்சிக் கூத்தாடி நடிகையை விடுவித்து ஒப்படைத்தார்களாம்.

இந்தத் தகவல் மேலிடத்துக்குப் போன அடுத்த கணம், பலிபீடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டார் அந்த முக்கியப் பிரமுகர்! இதானாய்யா உன் 'உயர் கல்வி' லட்சணம் என வறுத்தெடுத்ததோடு ப்யூஸைப் பிடுங்கிவிட்டார்கள்.

பிரமுகருக்கு கட்சி, பதவி ரீதியாக தண்டனை கிடைத்தாலும், நடிகையை எந்த நேரமும் தூக்கிப் போக ஆட்கள் தயார்தானாம்!

மேலும் கிசு கிசு செய்திகள்

Story first published:  Thursday, October 11, 2012, 10:14 [IST]
English summary
The top gossip in film circle is the secret abduction of top actress by an ADMK leader.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI