சென்னை: கோலிவுட்டில் அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவிக் கொண்டே தான் இருக்கும். அதில் டாப் 5 காதல் கிசுகிசுக்களைப் பார்க்கலாம்.
திரையுலகினர் பற்றி கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. மக்களுக்கும் திரையுலகினர் பற்றிய கிசுகிசுக்களைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். இந்த ஆண்டில் கோலிவுட்டில் பரவிய பல கிசுகிசுக்களில் டாப் 5 காதல் கிசுகிசுக்களைப் பார்ப்போம்.
ஹன்சிகாவை காதலிக்கும் பிரபுதேவா
நயன்தாராவுடன் காதலில் இருந்தபோதே பிரபுவதேவாவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே காதல் என்று கோலிவுட்டில் முணுமுணுத்தனர். நயன் பிரியக் கூட இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ஆனால் ஹன்சிகாவோ அய்யய்யோ பிரபுதேவா என் அண்ணன் மாதிரி என்று அலறினார். அதன் பிறகு பிரபுதேவா மும்பைக்கு ஜாகையை மாற்றிவிட்டார்.























