சென்னை: தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகி ர.குணசீலன் நீக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகியாக நீண்டகாலமாக இருந்து வந்தவர் ர.குணசீலன். இந்த நிலையில் அவரை அப்பொறுப்பிலிருந்து நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகியாக வேலை செய்து வந்த ர.குணசீலன், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் டி.ஜான் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஏ.ராஜு ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து 13.8.2008 முதல் நீக்கப்படுகிறார்கள்.
மேற்கொண்டு மாவட்ட, நகர, கிளை இயக்கச் சகோதரர்கள் அவர்களிடம் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், புதிய நிர்வாகி நியமிக்கப்படும் வரை எப்பொழுதும் போல் நமது நற்பணிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.