த்ரிஷாவுக்கு கமலின் செம்மொழி ட்யூஷன்!!

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2008, 15:04 [IST]
கமல்ஹாசனின் மர்மயோகி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷாவுக்கு தூய தமிழில் பேச பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஒரு தமிழாசிரியரை நிமித்துள்ள கமல்ஹாசன், அவ்வப்போது தானும் உடனிருந்து இந்த தமிழ்ப் பயிற்சியைத் தருகிறாராம்.

மர்மயோகி ஏழாம் நூற்றாண்டில் நடந்த சில உண்மை சரித்திர சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் படமாகும். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள்.

படத்துக்கான போட்டோ செஷன் சில தினங்களுக்கு முன் ஏவிஎம் ஸ்டுடியோவில் கடும் பாதுகாப்புக்கிடையே நடத்தப்பட்டது.

தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களிலிருது 100 பேரை பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்து, செல்போன் உபயோகத்துக்கு தடை விதித்து இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்தார் கமல்ஹாசன்.

இதில் கமலுடன் நடிக்கும் த்ரிஷா, ஸ்ரேயா ஆகிய இருவரும் பங்கேற்றனர். மற்ற நாயகிகள் இருவரும் இன்னொரு போட்டோ ஷூட்டில் பங்கேற்கிறார்கள்.

படத்துக்கான துவக்க விழா மும்பையில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

படத்தில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் சொந்தக் குரலில்தான் (அது எப்படி இருந்தாலும் பரவாயில்ல... முதலில் பேச டிரை பண்ணுங்க என்றாராம் கமல்!) பேச வேண்டும் என எழுதி வாங்காத குறையாகக் கூறிவிட்டாராம் கமல்.

இன்னொன்று இந்தப் படம் ஏழாம் நூற்றாண்டுக் கதை என்பதால் சுத்தத் தமிழில்தான் வசனங்களை உச்சரிக்க வேண்டும் என்பதையும் உறுதியாகச் சொன்னாராம்.

இதைக் கேட்ட த்ரிஷா, ஸ்ரேயா இருவருமே சற்று மிரண்டுவிட பின்னர் தனித் தமிழ் ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்துள்ளார் கமல்.

படப்பிடிப்புத் துவங்குவதற்குள் இந்த வேலை முடிந்துவிட வேண்டும் என்பதால் கமல் மேற்பார்வையிலேயே இந்த ட்யூஷனும் நடப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படத்தின் இன்னும் சில சிறப்பம்சங்கள்:

படம் முழுவதையும் ரெட் கேமிராவில்தான் படம் பிடிக்கப் போகிறார் இயக்குநர் கமல். இதற்காக ஹாலிவுட் ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஒரு பெரும் மேக்கப் குழுவே பணியாற்றுகிறது. இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள கலைஞர்களில் இருவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள். குறிப்பாக ஸ்பிரே மேக்கப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்த ஸ்பிரே மேக்கப்பில்தான் த்ரிஷா படம் முழுக்க ஜொலிக்கப் போகிறாராம்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST