அஜீத்தின் 50வது படம்-இயக்கும் வெங்கட் பிரபு

திங்கள்கிழமை, நவம்பர் 3, 2008, 17:15 [IST]
அஜீத் நடிக்கும் 50-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்காக ஏற்கெனவே வெங்கட் பிரபு ஒரு கதையை அஜீத்துக்கு கூறியுள்ளார். அந்தக் கதையை முழுமையாக்கும் முயற்சி நடந்து வருவதை ஏற்கெனவே தட்ஸ்தமிழில் கூறியிருந்தோம்.

இப்போது அதை அஜீத்தே தனது பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அஜீத் கூறியுள்ளதாவது:

எனது 50-வது படம் குறித்து சில இணைய தளங்களில் வந்துள்ள செய்தி உண்மைதான். வெங்கட் பிரபுதான் அந்தப் படத்தை இயக்குகிறார். அவர் கூறிய ஒன்லைன் மிக சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப் படத்துக்கான தயாரிப்பாளர் மற்றும் இதர விவரங்கள் குறித்து விரைவில் தகவல் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் அஜீத் நடிப்பார்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST