கமல் 'தலைவன்'?

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 11, 2008, 12:29 [IST]
மர்மயோகியை கமல்ஹாசன் முற்றிலுமாக நிறுத்தி வைத்து விட்டது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அடுத்து அதிரடியான காமெடி பிளஸ் அட்வென்சர் படத்தில் நடிக்கவுள்ளார் கமல். படத்திற்குப் பெயர் 'தலைவன் இருக்கிறான்'.

கமல்ஹாசனின் லட்சியப் படமான மருதநாயகம் முடங்கிக் கிடக்கிறது. கண்டிப்பாக வரும், ஆனால் எப்போது என்று தெரியவில்லை என்று கமலே கூறுகிறார். இந்த நிலையில் மருதநாயகம் வரிசையில் மர்மயோகியும் இணைகிறது.

பெரும் பொருட்செலவில் திட்டமிடப்பட்ட மர்மயோகியை தயாரிக்கும் அளவுக்கு ஸ்திரமான பண நிலையில் பிரமீட் சாய்மீரா நிறுவனம் இல்லாததால் படத்தை கிடப்பில் போட கமல்ஹாசன் தீர்மானித்து விட்டார்.

அதேசமயம், தனது ரசிகர்களை பரிபூரணமாக திருப்திப்படுத்தும் வகையி்ல அட்டகாசமான காமெடி, அட்வென்ச்சர் படம் ஒன்றை இயக்கி, நடிக்கவுள்ளார்.

படத்திற்கு இப்போதைக்கு தலைவன் இருக்கிறான் என்று பெயரிட்டுள்ளனராம். இதில் கமல்ஹாசன் தவிர மோகன்லால், வெங்கடேஷ், ரிஷிகபூர் என பெரும் தலைகளும் இடம் பெறவுள்ளனவாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

மர்மயோகிக்காக புக் ஆகியிருந்த திரிஷா, ஷ்ரியாவை இதில் பயன்படுத்திக் கொள்ள கமல் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. படம் குறித்த முழு விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என எதி்ர்பார்க்கப்படுகிறது.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட்தான் இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறது.

படம் முழுக்க அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது.

கதை, திரைக்கதை, இயக்கம் கமல்.

சீக்கிரமாக வாங்க தலைவா!
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST