தமன்னாவுக்காகக் காத்திருந்து.....

சனிக்கிழமை, நவம்பர் 15, 2008, 16:07 [IST]
தமன்னாவுக்காக ஒரு வருடம் காத்திருந்ததால் எப்போதோ வந்திருக்க வேண்டிய என் படம் தாமதமாகிவிட்டது என்கிறார் ஜெய் ஆகாஷ்.

ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் மதன். ஏற்கெனவே காதலன் காதலி எனும் படத்தையும் இயக்கி வருகிறார் ஆகாஷ்.

இந் நிலையில் மதன் படத்தின் படப்பிப்பு தளத்தில் நிருபர்களைச் சந்தித்தார் மதன். அவர் கூறியதாவது:

தமிழில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவனாக இருக்கிறேன். ஆனாலும் தமிழில் பெரிய வெற்றிப் படம் ஒன்று கூட எனக்கு அமையவில்லை.

நான் விரும்பும் இயக்குநர்கள் என்னை விரும்புவதில்லை. என்னை வைத்து இயக்க அவர்கள் தயாராக இல்லாதபோது, நான் என்னதான் செய்ய முடியும்? அதனால்தான் நானே இயக்குநராகிவிட்டேன்.

எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று முனைப்பு எனக்கு. இதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியுமா...?

இந்தப் படம் என்னை பக்கா கமர்ஷியல் ஹீரோவாக அடையாளம் காட்டும்.

இந்தப் படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தமன்னா. ஆனால் அவருக்காக ஒரு வருடத்துக்குமேலே காத்திருந்தேன். அதில் என் படம் தாமதமானதுதான் பலன். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. நான் மீண்டும் படம் தொடங்கும்போது அவர் பிஸியாகிவிட்டார். இப்போது சுனேனா கதாநாயகியாக நடிக்கிறார்.

தமன்னாவின் பாத்திரத்துக்கு ராதிகா மேனன் என்ற புதுமுகத்தை ஒப்பந்தம் செய்துள்ளேன். ஜனவரி மாதம் 2வது வாரம் பொங்கலுக்கு படம் ரிலீஸ் என்கிறார் ஜெய் ஆகாஷ்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST