கமல்-மிஷ்கின் கூட்டணி...'மர்மயோகி' உயிர் பெறுகிறது?

வியாழக்கிழமை, ஜூலை 30, 2009, 12:49 [IST]
நிதிப் பிரச்சினையால் கைவிடப்பட்ட கமல்ஹாசனின் மர்மயோகியை மீண்டும் உருவாக்கும் முயற்சி தொடர்கிறது.

நடிகர் கமல் - இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் சந்தித்துப் பேசியபது நினைவிருக்கலாம்.

அப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவது குறித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.

மிஷ்கின் தான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த சரித்திரக் கதை ஒன்றகை கமலிடம் கூறியுள்ளார். அப்போது ஏற்கெனவே தான் உருவாக்கியுள்ள மருத நாயகம் மற்றும் மர்மயோகி கதைகள் பற்றியும் கமல் கூற, கடைசியில் மர்மயோகி கதையையே மறுபடியும் படமாக்கும் திட்டமும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமல் -மிஷ்கின் இருவரும் மீண்டும் சந்தித்து விவாதிக்க உள்ளனர்.

இதற்கிடையே, தனது உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டை அடுத்த வாரம் நடத்துகிறார் கமல். அந்த விழாவிலேயே அடுத்த படம் குறித்த அறிவிப்பினையும் வெளியிடுவார் என்றும் கூறுகிறார்கள்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST