Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Posted by:
Published: Monday, December 13, 2010, 15:18 [IST]

13 Vijay Sold Old House Astrologer Advice

சாலிகிராமத்திலிருந்த தனது வீட்டை விற்றுவிட்டார் நடிகர் விஜய். இதற்கு சரியான காரணம் எதுவும் சொல்லப்படாவிட்டாலும், ஜோதிடர் அறிவுரை காரணமாகவே அவர் விற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் அவருக்கு திடீரென்று முளைத்துள்ள பிரச்சினைகள் காரணமாக, பல்வேறு பரிகாரங்கள் மற்றும் பூஜைகளிலும் விஜய் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அதே நேரம் அரசியல் ரீதியான பாதுகாப்பிலும் கவனமாக உள்ளார்.

தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசிக்கும் விஜய், தன் தந்தையுடன் குடியிருந்த பழைய வீட்டை இப்போது விற்பனை செய்துவிட்டார். இதனை வாங்கியிருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி. முதலில் விஜய் ஆண்டன இதை வாடகைக்கு எடுத்திருந்ததாக கூறப்பட்டது. இங்குதான் தனது இசைப் பதிவு கூடத்தை அமைத்துள்ளார் ஆண்டனி. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகில் அடையாளம் காட்டப்பட்டவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தந்தை நேற்று முன்தினம் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விரைவில் விஜய்யும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
Actor Vijay has sold his house in Saligramam. It was his family home for a long time before he built the luxury country villa in the upscale area of Neelankarai. Though the real reason for selling the house is knot known, sources say it is on the advice of a family astrologer. The house has been now purchased by music director Vijay Anton
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST