ரசிகர்களைப் பரவசப்படுத்திய 'ரஜினி படங்கள்!'

சனிக்கிழமை, ஜூலை 23, 2011, 12:06 [IST]
சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பிய நாளன்று அவரைப் பார்க்க தமிழகமே திரண்டு வந்ததைப் போன்றதொரு தோற்றம் சென்னை விமான நிலையத்தில்.

ரஜினி விமானநிலையத்திலிருந்து வெளியேறி ரசிகர்களைப் பார்த்து கும்பிட்டபோது, அவரை ரசிகர்களில் பலரால் முழுமையாக பார்க்க முடியவில்லை. போலீஸ் தள்ளு முள்ளு தடியடி என ஏக கலாட்டா. ஆனால் இதைவிட ரசிகர்களை வேதனைப்படுத்தியது, 'தலைவரைப் பார்க்க முடியவில்லையே' என்பதுதான்.

அன்றைய தினம் நடந்த கலாட்டாவில், ஒரு பத்திரிகை புகைப்படக்காரரால் கூட ரஜினியை தெளிவாக படம் எடுக்க முடியவில்லை. இதுவும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது.

அந்த வேதனை / ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ளன ரஜினியின் புதிய புகைப்படங்கள்.

இந்தப் படங்கள் அவர் சிங்கப்பூரிலிருந்து கிளம்பியபோது எடுக்கப்பட்டவை.

தனக்கே உரிய மிடுக்கு மற்றும் ஸ்டைலில் அவர் நடந்து வருவது, பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் மருத்துவமனை ஊழியர்களுடன், சிங்கப்பூரில் தனக்கு உதவிய நண்பர்களுடன் சேர்ந்து நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இதில் உள்ளன.

ரஜினியை நேரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளன இந்தப் படங்கள்.

English summary
Thousands of fans thrilled to see their matinee god Superstar Rajini's new photographs which released recently.
User Comments
Gnanasingh SPR 27 Jul 2011 04:40 pm
மருத்துவ மனையிலிருந்து திரும்பும் ஒருவர் எப்படி இருப்பார் ? அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்
A D ESHWAR 24 Jul 2011 07:00 pm
சன் டிவிக்கு பிறகு ரஜனிக்கு ஜால்ரா அடிப்பதில் உங்களை மிஞ்ச ஆல்லில்லை
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST