ரஜினி வழியில் 'மலை' ஏறுகிறார் அஜீத்!

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 25, 2011, 12:34 [IST]
இமயமலை செல்லும் நடிகர்கள் வரிசையில் இணைகிறார் அஜீத். ரஜினி பாணியில் இவரும் இமயமலைக்குச் செல்லப் போகிறாராம்.

சமீபத்தில்தான் மங்காத்தா என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார் அஜீத். அடுத்து பில்லாட2 வேலைகளில் பிசியாகியுள்ளார். மங்காத்தாவில் வெள்ளை முடியுடன் வந்த அஜீத், இதில் சிக்கென யூத் கெட்டப்பில் வரப் போகிறாராம். இந்த நிலையில் மெதுவாக இமயமலைக்கும் ஒருடிரிப் அடிக்கவுள்ளாராம்.

இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

மங்காத்தா நான் நீண்ட காலமாக மௌனம் காத்ததற்கு கிடைத்த வெற்றி. படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டவும் செய்கிறார்கள். இவன் என்னடா படம் முழுவதும் தண்ணி, தம்மோடு தான் இருக்கான் என்றும் சொல்கிறார்கள். அனைத்தையும் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அஜித் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பான்.

என்ன தல தத்துவமா பொழிகிறீர்களே? உங்க தலைவர் ரஜினி பாணியில் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டீர்களா? என்று கேட்டதற்கு,

எனக்கு ஏற்கனவே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கியத் திருத்தலங்களுக்கு சென்று வந்துள்னேன். 4 தடவை சென்னையில் இருந்து திருப்பதிக்கு நடந்து சென்றிருக்கிறேன். என்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக மாறுவேடம் போட்டு நண்பர்களோடு சென்றேன்.

சூப்பர் ஸ்டார் இமயமலை பற்றி ஒரு புத்தகம் கொடுத்தார். அதைப் படித்ததில் இருந்து எனக்கும் இமயமலைக்கு போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. விரைவில் இமயமலைக்கு புறப்பட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன் என்றார்.
English summary
Though Thala Ajith Kumar is busy with Billa 2, he is planning to go to himalayas following the footstep of his mentor Rajinikanth. Ajith has matured gracefully and considers praises and criticism equally.
User Comments
pirav 13 Oct 2011 09:44 pm
Donnu, வேற எவண்டா ஒழுங்கா நடிக்கிறான், தல மட்டும் தாண்ட அப்பனோட help இல்லாம தனி ஆளா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த Hero, தல தல தான்.
don 13 Oct 2011 10:27 am
காக்கா அஜித் .. 1st ஒழுங்கா act பண்ணு ...
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST