நண்பனில் நடிக்காததில் வருத்தமில்லை, மகிழ்ச்சிதான்! - மாதவன்

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 24, 2012, 18:18 [IST]
நண்பன் படத்தில் நான் நடிக்காததில் வருத்தம் இல்லை. உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன், என்கிறார் மாதவன்.

ஆர்யாவுடன் இணைந்து மாதவன் நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் குறித்து மாதவன் கூறுகையில், 'வேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்தது ரொம்பப் பிடித்திருந்தது. தமிழில் இரண்டு ஹீரோ படங்கள் இனி நிறைய வரும் என நினைக்கிறேன்.

நண்பன் படம் நன்றாக வந்தது மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் துளியும் இல்லை. நடிக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான்.

நானும், பிபாஷாபாசுவும் 'ஜோடி பிரேக்கர்ஸ்' (இந்தி) படத்தில் நடித்த போது, எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த படம் வெளி வந்து, அதைப் பார்த்த போது நாங்கள் இருவரும் அவ்வளவு பொருத்தமான ஜோடியாக தெரிந்தோம். பிபாஷாவைப்போல் தீபிகா படுகோனேயும் எனக்கு பொருத்தமானவராக இருப்பார்.

வேட்டையில் சமீரா எனக்கு சரியான ஜோடியாக இருந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, என்னுடன் நடிப்பவர்களுக்கு நான் பொருத்தமாக இருப்பது சந்தோஷம்தான்," என்றார்.

English summary
Madhavan says that he hasn't any regrets for missed Nanban offer. He also says that the remake version of 3 Idiots is shaped up well like the original.
User Comments
R KUMAR 25 Jan 2012 03:55 pm
இந்த படத்துல வடிவேலு,சந்தானம்,கஞ்சாகருப்பு அப்புறம் சத்தியராஜுக்கு பதிலா கவுண்டமணி ,அப்புறம் சத்தியன் கேரக்டர்ல சத்தியனே நடித்திருந்தால் படம் படு சூப்பர இருந்திருக்கும்
Thagappan Yappaa 25 Jan 2012 02:25 pm
டாக்குடர் விசை படத்துல மனுஷன் நடிப்பானா?
R KUMAR 25 Jan 2012 03:54 pm
இந்த படத்துல வடிவேலு,சந்தானம்,கஞ்சாகருப்பு அப்புறம் சத்தியராஜுக்கு பதிலா கவுண்டமணி ,அப்புறம் சத்தியன் கேரக்டர்ல சத்தியனே நடித்திருந்தால் படம் படு சூப்பர இருந்திருக்கும்.
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST