கமலின் மருதநாயகத்தில் ரஜினி?

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2012, 15:48 [IST]
மருதநாயகம் படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் கமல்ஹாஸன். இந்த முறை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதாவது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.

1997-ம் ஆண்டு மிகுந்த பப்ளிசிட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மருதநாயகன். இங்கிலாந்து மகாராணியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்டார். ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது. காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவியும் தடைபட்டுப் போனது. எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.

சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துள்ளார். இம்முறை ஆச்சரியமூட்டும் வகையில், இப்படத்தில் தனது ஆருயில் நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமல்ஹாஸனே மும்பை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு (ரஜினி - கமல் சேர்ந்து நடிக்கும் படம்) யோசிச்சிக்கிட்டிருந்தாங்க... அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.

கமல் கூறுவதைப் பார்த்தால் அவர்தான் மருதநாயகமாக நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் முக்கிய வேடத்தில் ரஜினி நடிக்கலாம் என்று தெரிகிறது.

இதை ரசிகர்கள் ஏற்பார்களா...?
English summary
Recently a Mumbai tabloid has reported that Kamal Haasan is all set to revive his long forgotten magnum opus Marudhanayagam with the help of Super Star Rajinikanth.
User Comments
ragavan 18 Feb 2012 04:31 pm
கமல் ஹாசன் இஸ் சூப்பேர் ஹீரோ சோ ரஜினி ஓகே சொல்லுவர்
redrosemuthu 18 Feb 2012 12:30 pm
மருத்தநாயகம் ரஜினி & உலகநாயகன் கூட்டணி சூப்பர் ஹிட்.........
manikandan 18 Feb 2012 10:53 am
nalla role ah iruntha kandippa nadippar super star...ithuthan makkaloda ethiparpum kooda
First Namenatarajan Balakrishnan 18 Feb 2012 10:05 am
சைகோ ரஜினி, பேரன் பேத்திகள் எல்லாம் எடுத்துவிட்டு இன்னும் என்ன மயிருக்கு நடிக்கிறானோ தெரியவில்லை !இந்த குமல் எல்லா நடிகைகளின் குன்ட்டியையும் கடித்துவிட்டு நடிப்பு என்று சொல்லும் சைகோ !இந்த கிழவன்களை ஊடு கட்டி அடிக்கணும் !
prakash 18 Feb 2012 07:41 am
kandipa.. avanga actors apdinnu solluratha vida friends nu sollurathu siranthathu.. sirantha nabaargal nadikum flim...nalla irukum..
vasanthan 17 Feb 2012 10:53 am
நடிச்ச தலைவர் மருத நாயகன நடிக்கட்டும் ,இல்லாட்டி அவர் இதில் நடிக்கவே வேணாம் ,இந்த படத்தையும் யாரும் தயாரிக்க மாட்டங்க.
Chandru Krishna 16 Feb 2012 06:37 pm
"manali gaja" சொல்வது 100 க்கு 100 நூறு உண்மை தலைவா! அன்று அப்படிதானே "விடுதலை" படத்துலே நடிகர் திலகத்துக்கு நீங்க மொக்க ரோல் கொடுத்து (வில்லனா காமெடியனா அப்படின்னு சிவாஜிக்கே ஒரே குழப்பம்?) கடைசிலே கேவலமா ஆக்கிட்டிங்க! கால சக்கரம் ஒரே இடத்தில் நிற்பது கிடையாது.......! இப்ப கமல் மூலமா மருதநாயகத்தில்........பாபா, ராகவேந்தர் உங்களை காப்பாத்த உங்களுடன் நானும் எல்லா ரசிகர்களும் சேர்ந்து சோறு போட்ட சம்ஸ்கிருத மொழியில் வேண்டுவோமாக....!
Chandru Krishna 16 Feb 2012 06:49 pm
தானே புயலுக்கு நேற்று வந்த நயன்தாரா கூட 5 லட்சம் கொடுத்தாங்க, இத்தனைக்கும் அவங்க மலையாள குட்டி, நீங்க 50 லட்சம் கொடுத்து இருக்க வேண்டாமா அப்படின்னு நாங்க கவலைப்படமாட்டோம், 2 வது இடத்திலே இருக்கிற, வடிகட்டிய கஞ்சன் அப்படின்னு பேர் வாங்கிய கமலே 15 லட்சம் உதவி செய்தப்போ, முதல் இடத்திலே இருக்கிற சூப்பர் ஸ்டார் ஏன் குறைந்தது 25 லட்சம் உதவி செய்து இருக்கலாமே அப்படின்னு நாங்க கேட்கமாட்டோம்! முல்லை பெரியாருக்கு ஏன் குரல் கொடுக்கல அப்படின்னு கூட நாங்க யோசிக்க மாட்டோம்! ராகவேந்தர் பக்தரா மாறி வேண்டுவோம்!
Indian 16 Feb 2012 06:07 pm
very good news also misc king need 2 joint
manali gaja 16 Feb 2012 04:58 pm
தலைவா. கண்டிப்பா இதுக்கு சம்மதம் சொல்லாதீங்க. காதலா காதலா படத்துல பிரபு தேவாக்கு ஆப்பு. ஹே ராம்ல ஷாருக் க்ஹானுக்கு ஆப்பு. குருதி புனல்ல அர்ஜுனுக்கு ஆப்பு. இந்த படத்துல உங்களுக்கு ஆப்பு வைக்க ரெடி ஆய்ட்டான் பய புள்ள. ஏமாந்துடாதீங்க. மொக்க ரோல் கொடுத்து கடைசில கேவலமா காடிருவான்.
கோண மூக்கன் 16 Feb 2012 05:32 pm
நல்லாத்தான் இருக்கும். ஆனா டைரக்ஷனை பாலச்சந்தரிடம் விட்டிருங்க.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST