'ஹி...ஹி...ஹி'..: ஐஐஎம் அகமதாபாத்தில் 'கொலவெறி' லெக்சர் கொடுத்த தனுஷ்!

புதன்கிழமை, பிப்ரவரி 8, 2012, 15:37 [IST]
Dhanush
நடிகர் தனுஷ் தான் பாடிய 'கொலவெறி' பாடலின் வெற்றி குறித்து ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.

3 படத்தில் தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி' பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இதனால் அவரது புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் கூட தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு தனுஷை அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கொலவெறி பாடலின் புகழ் குறித்து அவர் இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் ஸ்கூலான ஐஐஎம் அகமதாபாத்தில் உரை நிகழ்த்தினார்.

அங்கு திரைப்படத் துறை குறித்த படிப்பு படிக்கும் 150 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனுஷிடம் கேள்விகள் கேட்டனர்.

பின்னர் அவர் டுவிட்டரில், ''ஐஐஎம் அகமதாபாத் மிகவும் அழகாக உள்ளது. அங்குள்ளவர்களும் சரி, இடமும் சரி. மாணவர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டனர். அருமையான அனுபவம்'' என்று கூறியிருக்கிறார்.

உரை நிகழ்த்தும் முன்பு அவர் டுவிட்டரில் கூறுகையில், ''ஐஐஎம் அகமதாபாத்தில் நாளை உரை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் அதையெல்லாம் யார் கண்டார். நான் இந்தியன், ஆங்கிலேயன் அல்ல. ஹி...ஹி...ஹி.. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

English summary
Actor Dhanush has become a world famous personality after the hit of Kolaveri song. He gave lecture to the students of the best B-school in India namely IIM-Ahmedabad. Nearly 150 students attended the session and questioned him about the success of Kolaveri. Thanks to Kolaveri song.
User Comments
First Namenatarajan Balakrishnan 16 Feb 2012 10:20 am
எல்லா பொம்பளைகளையும், எப்படி மடக்குவது என்பது பற்றி தனுஷ் நல்ல பேசுவான் !
வர்ணாசிரம எதிரியின் தாய் 09 Feb 2012 06:23 pm
வசதியான பொண்ணை மடக்குவது எப்படி இதில்தான் தனுசு பெசுனானாம்!
வர்ணாசிரம எதிரியின் தாய் 09 Feb 2012 06:23 pm
ஐ ஐ எம் மரியாதை குப்பையாகி போச்சு!
Baskar P 08 Feb 2012 04:52 pm
எவன் என்ன விங்ஞானி ஆ ?? டேய் உனக்கே அறியர் இருக்கு, நீ எல்லாம் லெக்சர் கொடுத்தா என்ன ஆகும் டா ?? 2012 உலகம் அழிய போகுது பா...
ஹ்பிஜ்ப்சட்க் 13 Feb 2012 04:49 pm
சூப்பர் போ...பின்னிடீயே பாஸ்கர்
horlicks thirudan 08 Feb 2012 04:36 pm
தூ!
taurus 08 Feb 2012 04:35 pm
அப்படி என்ன தான் இருக்கோ அந்த பாடல் ல, எனக்கு தெரிஞ்சு நாராய தமிழ் பேசும் மக்களுக்கு அது ஒன்னும் அவளோ இம்ப்ரெஸ் பண்ணல.
Komberi Mookan 08 Feb 2012 03:48 pm
டேய் தனுசு ...... உனக்கு ஏறுதுடா மவுசு ...... இனி தாங்க முடியாது உன் ரவுசு ..... இப்படிக்கு ஒரு பெருசு .......
Nadodi Mannan 08 Feb 2012 05:13 pm
கேட்டதுமே எகிறுதுல்ல சிம்புவோட பல்சு!
Nadodi Mannan 08 Feb 2012 05:19 pm
கேட்டதுமே எகிறுதுல்ல சிம்புவோட பல்ஸு!
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST