நான் டாக்டராகணும்னு பெற்றோர் ஆசைப்பட்டார்கள்!- விஜய்

வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2012, 11:58 [IST]
Vijay
என்னை டாக்டராக்கணும்னு எங்க அப்பா அம்மா ஆசைப்பட்டாங்க. பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் இந்த நிலைக்கு வந்திருக்கேன், என்றார் நடிகர் விஜய்.

தான் நடித்த நண்பன் படத்தின் விளம்பரத்துக்காக ரசிகர்களை திரையரங்குகளில் சந்தித்துப் பேசி வருகிறார் விஜய்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் நேற்றைய நண்பன் காலைக் காட்சியின் இடையில் விஜய் தோன்றிப் பேசினார்.

அவர் கூறுகையில், "ரசிகர்கள் என்றைக்கும் எனது நண்பர்கள்தான். எல்லோருக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் போன்ற பல உறவுகள் இருக்கும். ஆனால், நண்பன் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம். ஆனால், அனைத்து விஷயங்களையும் நண்பனிடம்தான் பகிர்ந்து கொள்வோம்.

எனக்கு ப்ரண்ட்ஸ் என்றாலே ஒருவித சந்தோஷம் வந்துவிடும். ப்ரண்ட்ஸுக்குதான் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன்.

இந்தப் படத்தை மட்டுமல்ல, என்னுடைய எல்லா திரைப்படத்தையும் வெற்றிப் படமாக்குவதற்கு இரவு, பகல் பாராது சுவரொட்டி ஒட்டியும், தோரணம் கட்டியும், பட்டாசு வெடித்தும் எனக்காக ரசிகர்களாகிய நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். எனக்கு ஒரேயொரு சின்ன ஆசை. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் மீது அன்பு செலுத்தும் உங்களுக்காக நண்பன் படத்தில் சில யோசனைகளை கூறியுள்ளேன். என்னுடைய மத்த படங்கள் மாதிரியில்லாமல், இந்தப் படத்தின் வசனங்களை நானே உங்களுக்காக பேசியுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை நீங்கள் எல்லோரும் என் நண்பர்கள். உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள். அந்த துறையில் உங்களால் நம்பர் 1 ஆக வரமுடியும். நாம் வராவிட்டால் வேறு யார் வரப்போகிறார்கள்?

டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க...

என் வாழ்க்கையில் போராட்டங்களை அனுபவித்திருக்கிறேன். என்னை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் எங்கப்பா அம்மா ஆசை. எனது இளமைக் காலம் ஒரு போராட்டம்தான். பெரும் போராட்டத்துக்கு பிறகு எனக்குப் பிடித்த இத் துறையில் முயன்று இந் நிலைக்கு வந்துள்ளேன்," என்றார்.

English summary
Actor Vijay told that his parents wanted him to become as a doctor. 'But after a big struggle I entered in acting and came to this position,' says the actor.
User Comments
Kannan Thillai 12 Feb 2012 11:21 pm
அடேய் அடவடு உன் பல்லுக்கும் முன்சிகும் dr
Enna Ithu 10 Feb 2012 06:45 am
எலேய்.... சினிமால தானே நீ டாக்டர் ஆவேன்னு உன்னோட பெற்றோர்கள் ஆசை பட்டார்கள்? எலேய். டாக்டர் ஆகா மூளை வேனும்லே. இஸ்டைல் தேவை இலேலே. உன் மூளைக்கு இது வேறயா.
Vincent Mohammed 09 Feb 2012 10:14 pm
டெஸ்ட்
Vincent Mohammed 09 Feb 2012 10:07 pm
உங்க பெற்றோர் சொன்னது போல் நீதான் டாக்டர் ஆயிட்டியே...! ஓ.... நீ சொல்றது மருத்துவம் பார்க்கும் டாக்டரா...? அப்ப மரம்வெட்டிபயலும் டாக்டர் இல்லையா? அட போங்கடா....
Vincent Mohammed 09 Feb 2012 10:10 pm
இத மனசுல வச்சிதான் 2 டாக்டரும் (விஜய், சங்கர்) நண்பன் படத்துல பிரசவ சீன் வச்சிங்களா? பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் விஜய் வாழ்க....!
mubeen 09 Feb 2012 06:05 pm
எங்களுக்கு கூட நீ நல்ல நடிகனுமுனு ஆசை தான் . ஆனா நாம நினக்கிது எது நடக்குதா ?
Rasihan 09 Feb 2012 05:14 pm
தலைவா யு ஆர் கிரேட் !!
Emandha Sonagiri 09 Feb 2012 04:37 pm
போதும்டா சாமி...ரீல் அறுந்து போச்சு...அடிச்சா அடியுள அண்ட்ராயர் தான் கிழிஞ்சு போச்சுல்ல...எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு
mokku 09 Feb 2012 02:14 pm
என்னடாப்பா விஜய், நீ எல்லாம் படிப்பில் தரைமட்டம் அல்லவா! என்ன எங்களுக்கு புளுடா பன்னுகிறியா? உன் பெற்றோர் உன்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள் என. சிரிப்பை அடக்க முடியவில்லை ............................................................................................................................
ramani 09 Feb 2012 03:05 pm
ஏன்டா உங்களுக்கு விஜய் மேல இவளவு கோபம். உன் வேலைய பாத்துட்டு நீ இரு. அவன் வேலைய அவன் பாப்பான்.
rasihan 09 Feb 2012 05:14 pm
சரியா சொன்ன நண்பா !!
Murali 09 Feb 2012 12:54 pm
நீ டாக்டர் ஆகியிருந்த 1000 பேரைத்தான் கொன்றுப்பாய். இப்போ நடிகர்'னு சொல்லிட்டு 6 கோடி பேரை கொல்லுறியே.... சரிதானா....
Emandha Sonagiri 09 Feb 2012 04:37 pm
போதும்டா சாமி...ரீல் அறுந்து போச்சு...அடிச்சா அடியுள அண்ட்ராயர் தான் கிழிஞ்சு போச்சுல்ல...எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு
vijay 10 Feb 2012 10:25 am
சரியாய் சொன்னிங்க...............
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST