ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - புலம்புகிறார் தனுஷ்

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 17:31 [IST]
ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது ‘கொலவெறிடி’ பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், “குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, ‘ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்’ என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!” என்றார்

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே...

உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது.

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்... கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன்.

விடுங்க பாஸ்... இந்த தனுஷ் எப்பவுமே இப்படித்தான்!

English summary
Rajini's son in law Dhanush says, "It’s a huge burden to be known as Mr Rajinikanth’s son-in-law,” he says. “Once I married his daughter Aishwarya in 2004, I lost my identity. Whatever name I had earned before that on my own was wiped away. Wherever I went, I became a son-in-law. It was a terrible phase for me. I had to work double hard to get back my identity. Whenever I gave an interview, the first question would invariably be, ‘What is it like to be his son-in-law?’ Now that question comes somewhere in the middle of the interview. Hopefully, soon, it won’t be asked at all.”
User Comments
இந்தியன் 26 Mar 2012 01:15 pm
comedy comedy ............இதுக்கல்லாம் நேஷனல் அவார்ட் கிடைக்காது தம்பி .........................நீ எப்பதான் தொழில் கத்துக போறியோ ..................................
vigneshvar 13 Mar 2012 12:42 pm
என்ன மா அங்க சத்தம்,..... சும்மா பேசிகிட்டு இருக்கேன் மாமா...........
maha JP 22 Mar 2012 12:57 pm
சூப்பர்...
lurakoo lurakoo 05 Mar 2012 12:15 pm
கொல்லிகட்டைய எடுத்து மூஞ்சில சொரிஞ்சிகோ நாலா அடையாளம் இருக்கும். நாயா குளிப்பாட்டி நடு வீட்ல வெச்ச இபடித்தான்.
First Namenatarajan Balakrishnan 25 Feb 2012 03:58 pm
சைக்கிள் கப்புல்லே சொருகுவான் சுள்ளான் ஓல் மன்னன் ! இவன் மாமனார் போட்டதைவிட இவன் நல்ல போடுவான் !
unmai 25 Feb 2012 02:06 pm
தகுதி இல்லாதவனுக்கு கொஞ்சம் புகழ் கிடைத்தால் கூட இப்படி தான்.. சூப்பர் ஸ்டார்ட் பூர்வ ஜன்மத்தில் செய்த ஒரே பாவம் இந்த சுள்ளான் மருமகன வந்தது தான்.
First Namenatarajan Balakrishnan 18 Feb 2012 09:37 am
iswariaa வின் ஓட்டை ரொம்பா பெரிசா போச்சு ! சுள்ளான் சொருகுவதக்கு ஒரு டைட்டான ஓட்டை தேவை ! அது கமல் மகளிடம் உள்ளது !சுள்ளான் நல்லா சொருகி விட்டான் !
siva 18 Feb 2012 12:16 am
கொலைவெறி வெற்றி, தேசிய விருது ....தலைக்கு ஏறி விட்டது, மீண்டும் ஒன்றும் இல்லாமல் போகும்போது தேவை படும் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அடையாளம்..
VEERA KASINATHAN 17 Feb 2012 02:00 pm
why this kolaivery நல்லாத்தானே இருந்தே இப்ப என்ன லூசு மாதிரி பேசறே
Bhupathy 17 Feb 2012 10:59 am
துடப்பகட்டைக்கு பட்டுகொஞ்சம் கிடைச்சா கூட அது சாக்கடையே மேல் என்று சொல்லுது ! இவன் மூஞ்சியும் நடிப்பும் ???
humaiyun 16 Feb 2012 01:28 pm
அடிரா சக்க அதிரா sakka
Gokul 18 Feb 2012 04:02 am
அன்னை காலேஜ் உமையுனா நீ
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST