EnglishবাংলাHindiગુજરાતીಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னை திரும்பினார் ரஜினி!

Posted by:
Published: Monday, April 2, 2012, 14:52 [IST]

சென்னை திரும்பினார் ரஜினி!

கோச்சடையான் முதல்கட்ட படப்பிடிப்பை லண்டனில் முடித்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தின் ஷூட்டிங்குக்காக தனது மகளும் படத்தின் இயக்குநருமான சௌந்தர்யா, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் குழுவினரோடு கடந்த மாதம் 17-ந்தேதி அதிகாலை சென்னையிலிருந்து விமானத்தில் லண்டன் சென்றார் ரஜினி.

அங்கு சூட்டிங்கை முடித்த கையோடு, சர்வதேச பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

முதல்கட்டப் பணிகள் முடிந்ததால் ரஜினி தனது மகளுடன் இன்று அதிகாலை லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தார். ரஜினி வருவது பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அடுத்து தமிழகம் மற்றும் கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

English summary
Superstar Rajinikanth returned Chennai today after the completion of his historical mega venture Kochadaiyaan.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Promotion