Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

முதல் முறையாக டபுள் ரோல்..கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!

Posted by:
Published: Monday, May 21, 2012, 15:44 [IST]

Jayam Ravi Seek Kamal S Tips On Make Up

முதல் முறையாக டபுள் ரோலில் நடிக்கவிருக்கும் ஜெயம் ரவி, அதில் வரும் ஒரு கேரக்டருக்கு மெருகேற்ற கமல்ஹாசனிடம் ஆலோசனை பெறப் போகிறாராம்.

நடிப்பு, மேக்கப்... இந்த இரண்டுக்கும் புது இலக்கணம் வகுத்தவர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் நடிப்பைப் போலவே, தனது கேரக்டருக்காக அவர் மாறும் விதமும், அதற்காக அவர் மெனக்கெடுவதும், மேக்கப்புக்காக சிரமப்படுவதும் இன்று வரை பேசப்படும் விஷயமாகவே உள்ளது.

மேக்கப் என்றால் பவுடர் பூசி, தலையில் விக் வைக்கும் விஷயமல்ல, அதையும் தாண்டிய சீரியஸ் விஷயம் என்பதைப் புரிய வைத்தவர் கமல். அவரது கேரக்டர்களைப் போலவே அவரது மேக்கப் ஜாலங்களும் வெகுவாக ரசிக்கப்படும்.

தசாவதாரம் படத்தில் அவர் போட்ட பத்து விதமான மேக்கப்களும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ரகளையாகும்.

இந்த நிலையில் இதே மேக்கப் சமாச்சாரத்துக்காக கமல்ஹாசனிடம் ஐடியா கேட்கப் போகிறார் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி.

அமீர் இயக்கத்தில் ஆதி பகவன் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி. ஷூட்டிங்கை சற்று லேட்டாக நடத்தினாலும் தற்போது முடிக்கும் தருவாயை நெருங்கி விட்டாராம் அமீர். இதையடுத்து அடுத்த படத்துக்குத் தயாராகிறார் ஜெயம் ரவி.

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. இதில் அவர் முதல் முறையாக டபுள் ரோலில் நடிக்கப் போகிறார். அதாவது அப்பா, மகன் கேரக்டர். இதில் அப்பா கேரக்டரில் நடிக்கத்தான் கமல்ஹாசனின் யோசனைகளை எதிர்பார்த்துள்ளாராம் ஜெயம் ரவி.

இந்த கேரக்டருக்காக நடுத்தர வயது கொண்டவராக தோன்றவுள்ளார் ஜெயம் ரவி. இந்த தோற்றத்தை எப்படி தத்ரூபமாக பெறுவது என்பதற்காக கமல்ஹாசனை நாடி அவரிடம் மேக்கப் குறித்து சில டிப்ஸ்களைப் பெறுவதே அவரது திட்டமாம்.

தற்போது தனது விஸ்வரூபம் பட வேலைகளில் பிசியாக இருக்கிறார் கமல். அமெரிக்காவில் முகாமிட்டுள்ள அவர் சென்னை திரும்பியதும் ஜெயம் ரவி சந்திக்கப் போகிறாராம்.

English summary
Actor Jayam Ravi is waiting to meet Kamal Hassan to seek Kamal's tips on make up for his forthcoming movie Booloham.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI