Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மான் வேட்டை வழக்கில் சிறைக்குப் போகும் சல்மான்!

Posted by:
Published: Friday, July 27, 2012, 14:29 [IST]

Salman Khan Likely Face Jail Term Of Three Years

மும்பை: ராஜஸ்தானில் எண்பதுகளில் ஒரு இந்திப் படப்பிடிப்பின்போது நடிகர் சல்மான்கான் இரு மான்களைச் சுட்டுக் கொன்று, சக நடிகைகளுடன் சமைத்து விருந்துண்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு வெளியில் வந்ததும் நினைவிருக்கிறதா... இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த வழக்கில் சல்மானுக்கு தண்டனை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

1988-ல் "ஹம் சாத்சாத் ஹைய்ன்" என்ற படப்பிடிப்பின் போது, நடிகைகளுடன் காட்டுக்கு வேட்டையாடப் போன சல்மான்கான் இரு மான்களை சுட்டுக் கொன்றார்.

இதற்கு விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சுட்ட மான்கள் அந்தப் பகுதி வழங்குடி மக்களின் வணக்கத்துக்குரிய விலங்காக இருந்தது. தொடர்ந்து சல்மான்கான் மீது வழக்கும் தொடரப்பட்டது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இவ்வழக்கை ராஜஸ்தான் உயர்நீதி்மன்றம் தற்போது விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

வனவிலங்குகள் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் திக்திக் மனதுடன் காத்திருக்கிறார் சல்மான்!

English summary
It seems that one wrong that he committed eons ago has held on to actor Salman Khan's neck like an albatross leaving no room for him to live in peace.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs