சென்னை: விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திற்காக அஜீத் குமார் டுகாட்டி ஓட்டிய செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹேக்கராக அஜீத் நடிக்கிறார். படத்திற்கு வலை என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இந்த படக்குழுவினர் துபாயில் உள்ளனர்.
அங்கு பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தில் நயன், ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் உள்ளனர். அஜீத் ஒரு பைக் ரேசர் என்பது உங்களுக்கு தெரியும். அவர் பல பந்தயங்களில் கலந்து கொண்டு காயமடைந்து அறுவை சிகிச்சை செய்தவையும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஷ்ணுவர்தன் படத்திலும் 'தல' பைக் ஓட்டுகிறாராம்.





























