Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விஜயும், ரயிலும், சூப்பர் ஹிட் படங்களும்...

Posted by:
Updated: Thursday, February 14, 2013, 15:02 [IST]

சென்னை: விஜய் நடித்த பல ஹிட் படங்களில் ஒரு ரயில் காட்சியாவது இருப்பதை கவனித்துள்ளீர்களா?

'இளைய தளபதி' விஜய் நடித்து ஹிட்டான படங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு ரயில் காட்சியாவது உள்ளது. ரயில் காட்சி வந்தால் படம் ஹிட் என்று நினைத்து வைக்கிறார்களோ. தான் மது அருந்துவது போன்ற காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகும் என்று பலர் தன்னிடம் தெரிவித்ததாக நடிகை த்ரிஷா கூறினார்.

அது போன்று விஜய்க்கு ஒரு ரயில் காட்சி இருந்தால் ஹிட்டாகுமோ. அற்காக ரயில் காட்சி எப்போதுமே கைகொடுக்கும் என்று கூறவில்லை. ரயில் காட்சி இருந்தும் விஜயின் படம் ஓடாமல் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி ரயில் காட்சி வைத்து ஹிட்டான சில படங்களைப் பார்ப்போம்...

துள்ளாத மனமும் துள்ளும்

விஜய், சிம்ரன் நடித்து ஹிட்டான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ரயில் காட்சி உள்ளது.

குஷி

ஒரு இடுப்பால இவ்வளவு பிரச்சனையா என்ற கேள்வி எழுந்த குஷியிலும் ரயில் காட்சி உள்ளது.

கில்லி

கில்லி படத்தில் ஐ லவ் யூ டா செல்லம் என்று பிரகாஷ் ராஜ் த்ரிஷாவைப் பார்த்து கூறிய சீன் படு பிரபலம். அட இந்த படத்திலும் ரயில் காட்சி உள்ளதே. கில்லி அணி மதுரைக்கு ரயிலில் வந்து இறங்குவார்களே..

திருப்பாச்சி

திருப்பாச்சி படத்தில் தங்கை நிம்மதியாக வாழ சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளை அழிப்பார் விஜய். இதிலும் ரயில் காட்சி உள்ளது. தங்கையை ரயிலில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைப்பாரே.

போக்கிரி

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் அசினுடன் நடித்த போக்கிரியிலும் ரயில் காட்சி உள்ளது.

காவலன்

வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் தோல்வி அடைந்தபோது விஜய்க்கு கை கொடுத்த காவலன் படத்திலும் ரயில் காட்சி உள்ளது.

வேலாயுதம்

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வேலாயுதம் படத்தில் ரயிலில் அரிவாளை வைத்து சீட் போடும் புதிய டெக்னிக்கை கற்றுக்கொடுத்தார் விஜய்.

நண்பன்

இந்தி படமான 3 இடியட்ஸின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய் பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்திருந்தார். இதிலும் ரயில் காட்சி உள்ளது.

துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்த துப்பாக்கி படத்தில் துவக்க காட்சியிலேயே ரயில் வரும்.

Story first published:  Wednesday, February 13, 2013, 14:42 [IST]
English summary
Train seems to be Vijay's lucky charm. Most of his movies have atleast one scene that shows a train.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter