ஹீரோ செய்திகள்
குழந்தைகள் சத்துக் குறைபாடு விழிப்புணர்வு பிரச்சாரம்: ரஜினியைச் சந்தித்த மத்திய அரசு அதிகாரிகள்!சென்னை: குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்பாக, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினியை மத்திய அரசு அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதும் பாதிப்புக்குள்ளாவதும் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு சிறு பிராயத்திலிருந்தே சத்தான உணவுகளைத் தருவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நாடு தழுவிய பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை
சிம்பு கூட நடிக்க மாட்டேன்: தெலுங்கு நடிகர் ராணா'வடசென்னை' படத்தில் சிம்புவுடன் நடிக்க தெலுங்கு நடிகர் ராணா மறுப்பு தெரிவித்துவிட்டார்.இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து 'வடசென்னை' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்க வைக்க வெற்றிமாறன் விரும்பினார். இதற்காக ராணாவை அழைத்து கதையை கூறியுள்ளார்.கதையை கேட்டுவிட்டு, தனுஷை வைத்து 'பொல்லாதவன்' 'ஆடுகளம்' ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ள
சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம்! - மம்முட்டிமலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம் என்று மம்முட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. ஆனாலும் அந்தந்த மொழி திரைப்பட உலகில் முன்னணியில் உள்ள நடிகர்களை சூப்பர் ஸ்டார் என சில பத்திரிகைகள் விளிக்கின்றன.மலையாளத்தில் மம்முட்டி - மோகன் லால் இருவரையும் அதுபோல குறிப்பிடுகின்றன பத்திரிகைகள்.
ஐபிஎல் பண பரிவர்த்தனை: ஷாரூக்கானிடம் 7 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணைடெல்லி: ஐபிஎல் வீரர்களை பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ள ஷாரூக்கானிடம், அந்தப் பணம் எந்த வழியில் வந்தது என அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். இந்த அணிக்கு விளையாட சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பலகோடி ரூபாய் கொடுத்து
ஹாஸாரே?... நோ கமெண்ட்ஸ்'!! - விஜய் உஷார் பதில்ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என்ற பெயரில் அன்னா ஹஸாரே டெல்லியில் நடத்திய உண்ணாவிரத நாடகத்தில், கடைசி நாளன்று தன் பங்குக்கு ஒரு காட்சியை நடிகர் விஜய் அரங்கேற்றியது நினைவிருக்கலாம்.ஹஸாரேவின் உண்ணாவிரதத்தின் கடைசி நாளில் சென்னையிலிருந்து விமானத்தில் டெல்லிக்குப் போய், ஹஸாரேவுக்கு வாழ்த்து தெரிவித்து, பத்திரிகை - சேனல்களுக்கு பேட்டியெல்லாம் கொடுத்தார் விஜய். சமீபத்தில் வேலாயுதம்
விஷால், சிம்புவிடம் மன்னிப்புக் கேட்ட தருண் கோபி!திமிரு, காளை என இரண்டு படங்களை இயக்கிய தருண்கோபி, அந்த இரு படங்களின் நாயகர்களான விஷால் மற்றும் சிம்பு குறித்து முன்பு கடுமையாகப் பேசிவிட்டார். ஆனால் இப்போது தானே முழு நேர நடிகராக மாறிய பிறகுதான் நடிகர்களின் கஷ்டம் என்னவென்று புரிகிறதாம் அவருக்கு. எனவே முன்பு தான் பேசியதற்காக இப்போது சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் தருண்
செல்ல மகள் தியாவுக்காக காரி்ல் இருந்து பைக்கிற்கு தாவிய சூர்யாசொகுசு கார்களில் பறக்கும் நடிகர் சூர்யா தனது செல்ல மகள் தியாவுக்காக பைக் வாங்கியுள்ளார். அதில் வைத்து மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்.நடிகர் சூர்யாவின் மகள் தியாவுக்கு பைக் என்றால் அலாதிப் பிரியம். அதனால் சூர்யா ஒரு பைக் வாங்கியுள்ளார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகளை பைக்கில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார், சென்னையை சுற்றி வருகிறார்.
ரசிகர்களின் ரசனை உயர்ந்தால் நானும் உயர்வேன் - கமல் பிறந்த நாள் செய்திசென்னை: ரசிகர்களின் ரசனை உயர வேண்டும். ரசனை உயர்ந்தால் நானும் உயர்வேன், என்று கமல்ஹாஸன் தனது பிறந்த நாள் செய்தியாக கூறியுள்ளார்.கமல்ஹாஸன் இன்று தனது 57 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.இந்த பிறந்த நாளுக்கு அவர் ரசிகர்களுக்கு விடுத்துள்ள செய்தி:பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறார்கள். ரசனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.
கமல் ஹாசன் 57வது பிறந்த நாள்- ரசிகர்கள் ரத்ததானம், உடல் உறுப்புதானம்நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 57வது பிறந்தாளை வழக்கம் போல எளிமையாக கொண்டாடுகிறார். கமல் பிறந்தாளையொட்டி அவரது நற்பணி மன்றத்தினர் ரத்ததானம், உடல் உறுப்பு தானம் செய்தனர்.நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 57வது பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளின்போது நற்பணிகள் செய்யுமாறு கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகின்றனர்
விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் உலகநாயகன் கமல்!அம்மாவும் நீயே அப்பாவும் நீயேஅன்புடனே ஆதரிக்கும் அன்னையும் நீயே…என்ற பாடலை கண்ணீர் மல்க முருகனை பார்த்து பாடும் குழந்தையை பார்க்கும் எவரும் ஒரு கணம் அவர்களை மறந்து அந்த பாடலில் லயித்து விடுவர். சுட்டிக்குழந்தையாய் முகத்தில் அத்தனை பாவங்களையும் தேக்கி தன் வேண்டுதலை முருகனிடம் தெரிவித்த அந்த குழந்தைதான் உலகநாயகனாய் இன்றைக்கு விஸ்வரூப வளர்ச்சி
இந்திப் படம் இயக்குகிறார் தனுஷ் - சிறப்புச் செய்தி!இயக்குநராக வேண்டும் என்பது தனுஷின் ஆரம்ப காலக் கனவு. அவர் துள்ளுவதோ இளமை படம் செய்த போதே, நமக்களித்த ஒரு பேட்டியில், நிச்சயம் நான் படத்தை இயக்குவேன் என்று கூறியிருந்தார்.இப்போது தனுஷின் கனவு நிறைவேறுகிறது. முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார் தனுஷ். ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்!இப்போது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' படத்தில் நடித்து
முருகதாஸை புகழ்ந்தால் பல்லை உடைப்பேன்- சிரஞ்சீவி மகனுக்கு பாலகிருஷ்ணா 'வார்னிங்'!ஹைதராபாத்: இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸை தலையில் தூக்கி வைத்து பேசிய சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் பல்லை உடைப்பேன் என்று பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.ஏ. ஆர். முருகதாஸின் 7ஆம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த விழா ஒன்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில்
ஷாருக்கானுக்கு வயது 46: தூக்கத்தில் கொண்டாட்டம்!பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சற்று வித்தியாசமாக தூங்கிக் கொண்டே பிறந்தநாள் கொண்டாடுகிறார்.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது சூப்பர்ஹீரோ படமான ரா ஒன் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஆடி, ஓடித் திரிந்து கலைத்துவிட்டார். அதனால் தனது பிறந்தநாளை சற்று வித்தியாசமாக தூங்கிக் கொண்டே கொண்டாடுகிறார்.இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,வீட்டுக்கு வந்தால் என்
இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி! - தெலுங்கு இணையதளம்இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.இந்த வாக்குப் பதிவை ஒரு தெலுங்கு இணையதளம் நடத்தியுள்ளது.இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டப்பட்டவர் ஒரே ஒருவர்தான். அவர் ரஜினிகாந்த்!இன்றைக்கு இந்தி, மலையாளம், கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களை சூப்பர் ஸ்டார் என விளித்துக்
விஜய் வீட்டில் கொண்டாட்டம்... வேலாயுதம் குழுவினருக்கு விருந்து!வேலாயுதம் படக்குழுவினருக்கு நேற்று இரவு தனது வீட்டில் விருந்து கொடுத்தார் நடிகர் விஜய்.விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்த வேலாயுதம் படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றிகரமாக ஓடுவதாக விஜய் தெரிவித்தார். கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாகவும், வசூல் அதிகரித்துள்ளதாகவும் இந்தப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வேலாயுதம் பட இயக்குநர் ராஜா,
