twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உத்தம வில்லன் போஸ்டர் காப்பியா? - கமல் ஹாஸன் பதில்

    By Shankar
    |

    சென்னை: காதல் ஜோடி ஒன்று மார்பில் தலை சாய்த்தபடி போஸ் கொடுத்தால், அதை உடனே ஏக் துஜே கேலியே படத்தின் காப்பி என்று சொல்ல முடியுமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் கமல் ஹாஸன்.

    உத்தம வில்லன் பட போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்குதான் இப்படி பதில் தந்துள்ளார்.

    சர்ச்சை

    சர்ச்சை

    பிரெஞ்சு போட்டோகிராபர் ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்து தனது உத்தம வில்லன் பட போஸ்டரை கமல் டிசைன் செய்துள்ளார் என மீடியாவில் சமீப நாட்களாக எழுதி வருகிறார்கள்.

    கமல் விளக்கம்

    கமல் விளக்கம்

    இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம் இது:

    தெய்யம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடங்களாக மலபார் பகுதியில் வழக்கத்தில் உள்ளது.

    கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த 3வது தலைமுறை கலைஞர்தான் எனக்கு இந்த மேக்அப்பைப் போட்டார்.

    இதுக்குப் பேர் காப்பியா?

    இதுக்குப் பேர் காப்பியா?

    காதல் ஜோடி ஒன்று மார்பில் தலைவைத்தபடி போஸ் தந்தால் அது ‘ஏக் துஜே கே லியே போஸ்டரின் காப்பி என்று சொல்வார்களா?

    உத்தம வில்லன் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கூத்து கலையுடன் கலந்த கலவையாக தெய்யம் நடனமும் இடம்பெறுகிறது.

    அவ்வளவு கஷ்டம்

    அவ்வளவு கஷ்டம்

    முகத்தில் பெயின்ட்டால் மேக்அப் அணிவது சாதாரண விஷயம் கிடையாது. நான் அணிந்திருப்பது முகமூடி அல்ல. என் முகத்தின்மேல் பெயின்ட்டால் வரையப்பட்டிருக்கிறது. இதற்கு 4 மணி நேரம் ஆனது.

    வில்லன் என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. ‘வில் என்றால் ‘அம்பை'யும் குறிக்கும் ‘வில்லன்‘ என்றால் வில்லுடன் அம்பை ஏந்தியவன் என்று பொருள். இதுவரை 18 நிமிடத்துக்காக 7 சீன்கள் படமாகிவிட்டன," என்றார்.

    English summary
    Kamal Hassan denied reports of plagiarism in his forthcoming film Uthama Villain.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X