twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் படத்தில் அரசியல் பஞ்ச்சே வேண்டாம் சாமி: கார்த்தி கறார்

    By Siva
    |

    சென்னை: கார்த்தி தனது படங்களில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என்று கூறி வருகிறாராம்.

    கார்த்தி காரைக்குடியில் இருந்து கிளம்பி சென்னைக்கு சென்று புதிய அரசையே உருவாக்கினார் சகுனி படத்தில். தமிழகத்தில் புதிய முதல்வர் தேர்வாக காரணமாக இருந்த அவர் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க செல்வது போன்று படம் முடிந்தது.

    சகுனி படம் பப்படமானதோடு கார்த்தியின் மார்க்கெட்டையும் பதம் பார்த்தது.

    அரசியல்

    அரசியல்

    சகுனியின் தோல்வியை பார்த்த கார்த்தி காமெடி படங்கள் பக்கம் கவனத்தை திருப்பினார். இதையடுத்து தான் அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார்.

    காமெடியும்

    காமெடியும்

    அரசியல் தான் காப்பாற்றவில்லை என்று பார்த்தால் கார்த்திக்கு காமெடி படங்களும் கை கொடுக்காமல் போனது. இதனால் அவர் வருத்தம் அடைந்தார்.

    மீண்டும் அரசியல்

    மீண்டும் அரசியல்

    கார்த்தி அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சுவரில் விளம்பரங்கள் எழுதுபவராக நடிக்கும் கார்த்தி அந்த விளம்பரங்களால் பிரச்சனை ஏற்பட்டு அரசியல்வாதிகளுடன் மோத வேண்டி வருமாம். ஆக இந்த படத்திலும் அரசியல் தான் பிரதானம் போல.

    பஞ்ச்

    பஞ்ச்

    மீண்டும் அரசியல் படத்தில் நடித்தாலும் இதில் எந்த கட்சியையும் தாக்கி பஞ்ச் டயலாக் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் கார்த்தி. நாம் ஏதாவது பஞ்ச் பேச அதுவே நமக்கு வில்லனாகிவிடுமோ என்று அஞ்சுகிறாராம் கார்த்தி.

    தலைவா

    தலைவா

    தலைவா படத்தில் விஜய் பஞ்ச் டயலாக் விட்டு பட்ட அவஸ்தையை பார்த்து பல நடிகர்கள் பயந்துவிட்டார்களாம். விஜய்க்கே அப்படி என்றால் நம் கதியெல்லாம் என்னாகுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுவிட்டதாம் அவர்களுக்கு. அந்த கலக்கம் கார்த்திக்கும் ஏற்பட்டிருக்கிறது.

    English summary
    Karthi has reportedly told director Ranjith that he doesn't want any punch dilaogues referring any political parties in his movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X