twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘மூக்கு தான் என் பிளஸ் பாயிண்ட்’... இப்படிச் சொல்வது விக்ரம் பிரபு

    |

    சென்னை: நடிப்பு ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது எனச் சொல்வது விக்ரம் பிரவுவிற்கு பொருத்தமாக இருக்கும். காரணம் சேவாலியே சிவாஜியின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அறிமுகத்தோடு கும்கி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் விக்ரம் பிரபு.

    தன் முதல் படத்திலேயே வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களைக் கட்டிப் போட்டார். முதல்படத்தின் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தன் இரண்டாவது படமான இவன் வேற மாதிரியில் ஆக்‌ஷன் ஹீரோவாக அசத்தினார்.

    தற்போது இவரது மூன்றாவது படமான அரிமாநம்பி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், டைம்பாஸ் இதழுக்கு பேட்டியொன்று அளித்துள்ளார் விக்ரம்பிரபு. அதில், திமுக தலைவர் கருணாநிதி ஸ்டைலில் தானே கேள்விகளைத் தயார் செய்து பதிலளித்துள்ளார் அவர்.

    இதோ அந்த 'கேள்வியும் நானே, பதிலும் நானே' பகுதி...

    ரொம்பப் பிடிக்கும்...

    ரொம்பப் பிடிக்கும்...

    கேள்வி: விக்ரம் பிரபு என்ற பேர் உனக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும்?

    பதில்: அளவே கிடையாதுப்பா... ஏனா, அது அப்பாவோட செலக்‌ஷன். ‘உத்தமபுத்திரன்' படத்துல தாத்தா நடிச்ச விக்ரமன் என்ற கேரக்டர்ல அப்பா இம்ப்ரெஸ் ஆகி வச்ச பேர் இது.

    வித்தியாசமான அம்சம்...

    வித்தியாசமான அம்சம்...

    கேள்வி: உன்னோட மூக்கைப் பார்க்கும்போது என்ன தோணுது?

    பதில்: ஒவ்வொருத்தருக்கும் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கும். எனக்கு இந்த மூக்கு.

    உணர்ச்சிகளை வெளிக்காட்ட...

    உணர்ச்சிகளை வெளிக்காட்ட...

    ‘உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடிக்கும் போது உன் மூக்கு உனக்கு பெருசா உதவி பண்ணுதுப்பா'னு தாணு சாரைச் சொல்ல வெச்ச மூக்கு இது.

    போர் அடிச்சா...

    போர் அடிச்சா...

    கேள்வி: போர் அடிக்கும் போது என்ன செய்வே?

    பதில்: பேசாம நமக்குப் பிடிச்ச டிஷ்சை சமைச்சு சாப்பிட்டுட்டுத் தூங்குவேன்.

    சமையல் பிடிக்கும்....

    சமையல் பிடிக்கும்....

    கலிபோர்னியாவுல படிச்சப்ப சிக்கன், பர்கர்னு செய்யக் கத்துக்கிட்ட சமையலை இப்பவும் செஞ்சு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து சாப்பிடும் இண்ட்ரஸ்ட் இருக்கே, அது தனி சுகம் தான்.

    முதல்நாள் ஷூட்டிங்...

    முதல்நாள் ஷூட்டிங்...

    கேள்வி: கும்கி முதல் ஷூட்டிங் போறதுக்கு முதல்நாள் இரவு நடந்த கூத்து...

    பதில்: யப்பா தூக்கமே வரலை. கண்ணை மூடி படுத்துகிட்டு பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை முழிச்சு முழிச்சு விடிஞ்சிருச்சானு பார்த்திக்கிட்டு, விடிஞ்ச பிறகுதான் ரிலாக்ஸ் ஆச்சு.

    ஃப்ரண்ட்ஸ்....

    ஃப்ரண்ட்ஸ்....

    கேள்வி: பப்புக்குப் போற பழக்கமே இல்லையாமே...>

    பதில்: ஃப்ரண்ட்ஸ் கூட ரிலாக்ஸ்டா பேசிட்டு இருக்கிறதை விடவா பப் பெரிசு?

    பேசித் தீர்த்துக்கலாம் பாஸ்...

    பேசித் தீர்த்துக்கலாம் பாஸ்...

    கேள்வி: ஃப்ரெரெண்ட்ஸ் கூட சண்டை வந்தால்?

    பதில்: பேசித் தீர்த்துக்கலாம். அப்படித் தீர்க்க முடிஞ்சா தான் அவங்க ஃப்ரெண்ட்ஸ்.

    English summary
    Actor vikram Prabhu says, that his nose is his plus point.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X