twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதய நோய் பாதித்த 100 குழந்தைகளுக்கு உதவும் சல்மான்கான்!

    By Shankar
    |

    மும்பை: இதய நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு உதவப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

    நடிகர் சல்மான்கான் நேற்று ரம்ஜான் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் அவர் இதய நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் 'ட்விட்டர்' சமூக வலைதளத்தில் ஒரு தகவலை பதிவு செய்தார்.

    Salman Khan pledges to provide treatment for 100 heart patients

    அதில், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வசதி இல்லாத குடும்ப பின்னணியை கொண்ட 100 குழந்தைகளுக்கு தான் உதவி செய்ய விரும்புவதாகவும், அவர்களது சிகிச்சை செலவினை தானே ஏற்பதாகவும் தெரிவித்துளார். பீயிங் ஹ்யூமன் என்ற அறக்கட்டளை மூலம் இதனை அவர் செய்யப் போகிறார்.

    தனது இந்த திட்டத்தில் பயனடைய விரும்புகிறவர்கள் தன்னை சமூக வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ள சல்மான், இதைப் பயன்படுத்தி யாரும் தன்னை மோசடி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

    சமீபத்தில் வெளியான சல்மானின் புதிய படம் கிக் குறுகிய காலத்தில் ரூ 100 கோடியைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Salman Khan has announced that his Being Human charitable organisation will help "100 genuine patients" suffering from a heart condition by providing them free treatment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X