twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்டர்போல் தூதரானார் ஷாரூக்கான்!

    By Shankar
    |

    லண்டன்: சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல் அமைப்பின் தூதராக பொறுப்பேற்றுள்ளார் பாலிவுட்டின் முதல் நிலை நடிகர் ஷாரூக்கான்.

    ஒரு நாட்டில் குற்றம் செய்துவிட்டு, வேறு நாட்டில் போய் பதுங்கி இருப்பவர்களைக் கண்டுபிடிப்பது, நாடுகளுக்கிடையே ரகசிய குற்றத் தகவல்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற பணிகளைச் செய்யும் அமைப்பு இன்டர்போல். அதாவது சர்வதேச காவல் துறை.

    தீவிர நடிவடிக்கை

    தீவிர நடிவடிக்கை

    சர்வதேச அளவிலான ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கள்ளநோட்டு கும்பல், இணையதள மோசடி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக இண்டர்போல் போலீஸ் அதிகாரிகள் துப்பறிந்து, மேற்படி குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஜாக்கி சான்

    ஜாக்கி சான்

    இந்த இண்டர்போல் அமைப்பின் பிரசாரத் தூதர்களாக பிரபல நடிகர் ஜாக்கி சான், கால்பந்தாட்ட வீரர் லியோனெல் மெசி, பார்முலா ஒன் கார் பந்தய வீரர்களான ஃபெர்ணான்டோ அலோன்சோ மற்றும் கிமி ரெய்க்கோனென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஷாரூக்கானும்

    ஷாரூக்கானும்

    இந்நிலையில், பாலிவுட் கதாநாயகனும் உலக அளவில் பிரபலமான நடிர்களில் ஒருவருமான ஷாருக் கானை மற்றுமொரு பிரசாரத் தூதராக இன்டர்போல் நியமித்துள்ளது.

    முதல் இந்திய நடிகர்

    முதல் இந்திய நடிகர்

    குற்றங்களை எதிர்த்து, சட்டத்தை மதித்து மக்கள் வாழ வேண்டும் என்ற இன்டர்போலின் பிரசாரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இந்த நியமனம் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷாருக்கான், ‘கடவுளைத் தவிர, இந்த பூமியில் நான் யாருக்கும் பயப்படக் கூடாது. நான் யாருக்கு அநீதி இழைக்கக் கூடாது. ஒருதலை பட்சமாக நடந்துக் கொள்ளக் கூடாது.

    இதற்காக நான் அவதிப்பட நேரிடினும் 'வாய்மையால் பொய்மையை தேடிக் கண்டுபிடித்து, அதனை எதிர்த்திட வேண்டும்' என்று மகாத்மா காந்தி கூறியதைப்போல் இன்டர்போலின் பிரசாரத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை நான் மிகச் சிறந்த கவுரவமாகக் கருதுகிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Bollywood top star Shah Rukh Khan has been roped in as an ambassador for Interpol's "Turn Back Crime" campaign to promote awareness on how everyone can play a role in preventing crime.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X