Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'க்ளாஸ் ஆக்ஷன் படம்'- இவன் வேற மாதிரிக்கு ரஜினியின் பாராட்டு!
சென்னை: இவன் வேற மாதிரி ஒரு க்ளாஸ் ஆக்ஷன் படம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன், அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் 'இவன் வேற மாதிரி'. இப்படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியானது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்தார். பார்த்த கையோடு படத்தைப் பாராட்டி ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதம்:
'இவன் வேற மாதிரி' படத்தை பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்ஷன் படம். இது வரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இது நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப்படம் வெற்றி பெற்ற என் வாழ்த்துக்கள்.'
Superstar Rajinikanth praised Ivan Vera Mathiri movie as Class Action entertainer.