twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யுடன் ஜோடி சேர முன்னணி ஹீரோயின்கள் போட்டா போட்டி

    By Siva
    |

    சென்னை: விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் போட்டா போட்டி போடுகிறார்களாம்.

    ஜில்லா படத்தை அடுத்து விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கொல்கத்தாவில் பூஜை போட்டு படத்தை துவங்கினார்கள்.

    இதையடுத்து சென்னையில் ஒரு பாடலை படமாக்கிவிட்டு படக்குழு ஆந்திராவுக்கு சென்றுவிட்டது.

    சிம்புதேவன்

    சிம்புதேவன்

    முருகதாஸ் படத்தை அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார். சிம்பு கூறிய கதையை கேட்டு விஜய் அசந்துவிட்டாராம்.

    தீபிகா

    தீபிகா

    சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனேவை ஹீரோயினாக்க நினைத்தார்கள். ஆனால் அவரோ கதையைக் கூட கேட்காமல் ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதையடுத்து வேறு நாயகியை தேடினார்கள்.

    பிரியங்கா சோப்ரா

    பிரியங்கா சோப்ரா

    உலக அழகி பட்டம் வென்று விஜய்யின் தமிழன் படம் மூலம் ஹீரோயின் ஆன பிரியங்கா சோப்ராவை அணுகினார்கள். அவரும் தனது முதல் ஹீரோவான விஜய்யுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்.

    2 நாயகிகள்

    2 நாயகிகள்

    சிம்புதேவன் படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். அதில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா. மற்றொரு நாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

    முன்னணி ஹீரோயின்கள்

    முன்னணி ஹீரோயின்கள்

    விஜய் படத்தில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற ஹன்சிகா, காஜல் அகர்வால், அமலா பாலும் முயற்சி செய்கிறார்களாம்.

    English summary
    Buzz is that leading heroines are competing with one another to grab the opportunity to act in Vijay's movie to be directed by Chimbu Devan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X