twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படமெடுங்க - விஜய் வேண்டுகோள்

    By Shankar
    |

    சென்னை: இயக்குநர்கள் இனி இரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படங்கள் எடுத்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே நீளமாக படமெடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய்.

    மோகன்லால் - விஜய் - காஜல் அகர்வால் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் ஜில்லா. இந்தப் படத்தை ஆர் டி நேசன் இயக்கியிருந்தார்.

    சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்திரி தயாரித்த இந்தப் படம் பேபி ஆல்பட் திரையரங்கில் ஒரு காட்சியாக நூறு நாளைத் தாண்டியுள்ளது.

    நூறாவது நாள் விழா

    நூறாவது நாள் விழா

    இந்த நூறாவது நாள் விழா நேற்று மாலை சென்னை ஆல்பட் திரையரங்கில் நடந்தது. இதில் நடிகர் விஜய், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    விஜய்

    விஜய்

    நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது, "வாழ்க்கைல கஷ்டப்பட்டாதான் எல்லாம் கிடைக்கும், கஷ்டப்படாம எதுவும் கிடைச்சிடாது. ஜில்லா பட வெற்றி அப்படி கஷ்டப்பட்டு கிடைச்சதுதான்.

    தலைவா பிரச்சினை

    தலைவா பிரச்சினை

    ஜில்லா படத்துக்கு முன் ஒரு படம் வந்தது. அதை வெளியிட சில பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு மிகப் பெரிய நம்பிக்கையோடு எடுத்த படம்தான் ஜில்லா. இதனை வெற்றிப் பெற வைத்த அனைவருக்கும் நன்றி.

    100 நாள் சாதனை

    100 நாள் சாதனை

    இன்றைக்கு ஒரு படம் 100 நாள் ஓடறது சாதாரண விஷயம் இல்லை. ஜில்லா' படம் 100 நாள் ஓடி வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சி, ரசிகர்களால்தான் இப்படம் பெரிய வெற்றிப்பெற்றது. ரசிகர்களுக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2.30 மணி நேரத்துக்குள்ள படமெடுங்க

    2.30 மணி நேரத்துக்குள்ள படமெடுங்க

    பொதுவாக திரைப்படங்கள் பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும். அதுவும் குறுகிய நேரத்துக்குள் இருக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்துக்குள் முடியும் வகையில் படமெடுக்க வேண்டும். இல்லன்னா ரசிகர்கள் வாட்சைப் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க.

    புது இயக்குநர்கள்

    புது இயக்குநர்கள்

    ஆனால் தற்போது சில இயக்குனர்கள், 3.00 மணி நேரத்திற்கு மேலாக படத்தை இயக்குகிறார்கள். அது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும், ஆதலால் திரைப்படத்தை 2.30 மணி நேரத்திற்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்," என்றார்.

    ஜில்லாவே...

    ஜில்லாவே...

    ஜில்லா படமே கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருந்தது. பின்னர் 2.48 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அந்த அனுபவத்தில்தான் இப்படிச் சொல்கிறாரோ விஜய்?

    English summary
    Vijay requested new directors to make movies with the running time of 2.30 hours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X