twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த விஜய் சேதுபதி ஒன்றரைக் கோடி கடனாளியாம்!!

    By Shankar
    |

    இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து 5 வெற்றிப் படங்கள் தந்த விஜய் சேதுபதிக்கு ரூ 1.5 கோடி கடன் இருக்கிறதென்றால், அதுவும் சினிமா மூலம் ஏற்பட்ட கடன் என்றால் நம்ப முடிகிறதா?

    நம்பித்தான் ஆகணும்.. காரணம், இதைச் சொல்வது அவரேதான்!

    தமிழ் சினிமாவில் 2012, 2013 ஆகிய இரு ஆண்டுகள் விஜய் சேதுபதியுடையவையாக இருந்தன. பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வரிசையாக கமர்ஷியல் ஹிட்டடித்தன.

    ஆனால் அடுத்து வந்த இரு படங்கள் அவரைக் கவிழ்த்தன. அவை ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும்.

    சங்குத் தேவன்

    சங்குத் தேவன்

    அவர் தயாரித்து நடிப்பதாக ஒரு படம் அறிவிக்கப்பட்டது. அதுதான் சங்குத் தேவன். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த சில தினங்களில் அந்தப் படம் கைவிடப்பட்டது. விஜய் சேதுபதிக்கு இதில் ஏகப்பட்ட பணம் நஷ்டமாம்.

    ஒன்றரைக் கோடி

    ஒன்றரைக் கோடி

    ''நான் ரொம்ப ஆசைப்பட்டு நடிக்க ஆரம்பிச்ச படம் 'சங்குதேவன்'. ஆனா, அதை கமிட் பண்ணியிருக்கக் கூடாது. மூணு மாசமா வீட்ல சும்மா உட்காந்திருந்தேன். இப்போ ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் கட்டிக்கிட்டு இருக்கேன்," என்று ஆனந்த விகடன் வார இதழில் வெளிப்படையாக இதை தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

    இதற்கு காரணம் யார்?

    இதற்கு காரணம் யார்?

    அதையும் அவரே சொல்கிறார் இப்படி:

    "நண்பனாகப் பழகி மிக மோசமான துரோகியா மாறின சிலர்தான், இந்த வருத்தங்களைப் பரிசளிச்சிருக்காங்க. நிறைய வலியும் வேதனையும் கலந்த அந்தக் கவலைகள் ஒவ்வொண்ணும் ஓர் அனுபவம். அவை, என்னை இனி சரியான முடிவு எடுக்க வைக்கும்!''

    ஐந்து படங்கள்

    ஐந்து படங்கள்

    இப்போது விஜய் சேதுபதி ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் முதலில் வெளிவரப் போவது மெல்லிசை. அடுத்தடுத்து, வன்மம்', 'ஆரஞ்சு மிட்டாய்', 'இடம் பொருள் ஏவல்', 'புறம்போக்கு' 'வசந்த குமாரன்' போன்ற படங்கள் வெளிவருமாம்!

    சூதானமா இருக்கணும்ஜி!

    English summary
    Actor Vijay Sethupathy openly admitted that he was incurred Rs 1.5 cr loss due to Sanguthevan movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X