twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பேரன்னா இப்படி இருக்கனும்.. பிள்ளைன்னா இப்படி இருக்கக் கூடாது...."

    By Sudha
    |

    சென்னை: 10 மணிக்கு ஷூட்டிங் என்றால் 9.45 மணிக்கே செட்டில் இருப்பார் சிவாஜி கணேசன் என்பார்கள் அந்தக் காலத்து டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள்.. அதை இப்போது அப்படியே கடைப்பிடித்து வருகிறாராம் அவரது பேரன் விக்ரம் பிரபு.

    நடிகர் பிரபுவின் மகன்தான் விக்ரம் பிரபு. தாத்தா, தந்தை வழியில் விக்ரமும் இப்போது பிசியான ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வருகிறார்.

    படங்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறார். நல்ல கதாபாத்திரங்களாக பார்த்து நடித்து வருகிறார்.

    முதல் படத்திலேயே முத்திரை

    முதல் படத்திலேயே முத்திரை

    கும்கிதான் விக்ரமுக்கு முதல் படம். முதல் படத்திலேயே நடிப்பிலும், பாடி லாங்குவேஜிலும் முத்திரை பதித்தவர் விக்ரம் பிரபு.

    அரிமாநம்பியிலும்

    அரிமாநம்பியிலும்

    தற்போது அவரது அரிமாநம்பியும் அவருக்குப் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    தாத்தா பழக்கம்..

    தாத்தா பழக்கம்..

    விக்ரம் பிரபுவைப் பற்றி ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் சிலாகித்துச் சொல்கிறார்கள். அப்படியே தனது தாத்தா மாதிரியே இருக்கிறார் என்று.

    பங்க்சுவாலிட்டி

    பங்க்சுவாலிட்டி

    சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது, ஒழுக்கமாக நடந்து கொள்வது, தேவையில்லாத தலையீடுகளைச் செய்யாமல் இருப்பது, சொன்னபடி கேட்டு நடப்பது என்று சிவாஜி கணேசன் போலவே நடந்து கொள்கிறாராம் விக்ரம் பிரபு.

    அவரும்தான் இருக்காரே...

    அவரும்தான் இருக்காரே...

    இப்படி விக்ரம் பிரபுவைப் புகழும் வாய்கள் அந்தப் பக்கம் திரும்பி இன்னொரு வாரிசு நடிகரைப் பற்றி திட்டவும் செய்கின்றனவாம். அந்த வாரிசு கார்த்திக்கின் மகன் கெளதம்.

    சொல் பேச்சுக் கேட்பதில்லை

    சொல் பேச்சுக் கேட்பதில்லை

    கெளதம் சொல் பேச்சைக் கேட்பதில்லையாம். டைமுக்கு வர மாட்டாராம். பல டேக்குகளை வாங்குகிறாராம். தேவையில்லாமல் யோசனைகள் தெரிவிப்பாராம். சொதப்புவாராம்.

    வாங்கிக் கட்டிக் கொண்ட கெளதம்

    வாங்கிக் கட்டிக் கொண்ட கெளதம்

    யாரையும் மதிப்பதும் இல்லையாம். இப்படித்தான் சமீபத்தில் ஒரு பழைய தயாரிப்பாளர் - இவர் கார்த்திக்கை வைத்து நிறைய படம் செய்தவர் - கெளதமைத் தேடி வீட்டுக்கு வந்தாராம். ஆனால் வீட்டுக்குள் இருந்து கொண்டே கெளதம் இல்லை என்று உதவியாளரை விட்டுச் சொல்லச் சொன்னாராம் கெளதம். வந்தவர் வண்டி வண்டியாக திட்டி விட்டுப் போனதாக தகவல்....

    English summary
    Film personalities in Kollywood are all praise for Vikram Prabhu, grand son of legendery Shivaji Ganesan for his his character and punctuality.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X