twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடி பதவி ஏற்பு விழா... ஏன் தவிர்த்தார் ரஜினி?

    By Shankar
    |

    தனது நெருங்கிய நண்பரான நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற மிக முக்கிய விழாவுக்கு அரசு விருந்தினராகப் போயிருக்க வேண்டிய ரஜினி கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார்.

    காரணங்கள் இரண்டு...

    Why Rajini avoids Modi swearing in ceremony?

    முதல் காரணம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மத்திய அரசு அழைப்பிதழ் அனுப்ப, அவரும் வருவேன் என்று ஒப்புக் கொண்டதுதான்.

    இலங்கை தொடர்பான விஷயங்களில் எப்போதுமே தெளிவான முடிவை எடுத்து வருகிறார் ரஜினி.

    2009-ல் ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்த ரஜினி, தமிழர் மண்ணை தமிழருக்கே தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இறுதிப் போர் முடிந்து, கொழும்பில் ஐஃபா திரைப்பட விழா நடந்தபோது, அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ரஜினியை அழைக்க முடிவு செய்து, அழைப்பிதழ் தர வீட்டுக்கு வர அப்பாயின்ட்மென்ட் கேட்டார் சென்னையிலிருந்த இலங்கைத் தூதர்.

    விஷயத்தைக் கேட்டுக் கொண்ட ரஜினி, "நான் விழாவுக்கு நிச்சயம் வர மாட்டேன். எதற்காக அழைப்பிதழ் தர சிரமப்படுகிறீர்கள். வர வேண்டாம்," என ரஜினி தரப்பில் சொல்லப்பட்டது.

    இந்த விஷயம் மீடியா மூலம் வெளியில் தெரிய வர, அதன் பிறகு பெரும் போராட்டமே சென்னையிலும் மும்பையிலும் நடந்தது. அமிதாப், ஐஸ்வர்யா ராய் கூட அங்கு செல்வதைத் தவிர்த்துவிட்டனர்.

    எனவே பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சே வருகிறார் என்பது தெரிந்ததுமே, தான் அந்த விழாவுக்குப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார் ரஜினி.

    இரண்டாவது காரணம்...

    ராஜபக்சேவை நரேந்திர மோடி அழைத்ததைக் கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த அதிரடியான கண்டன அறிக்கை. இந்தக் கண்டன அறிக்கை வெளியான போது ரஜினி மைசூரில்தான் இருந்தார். அறிக்கை வெளியானதுமே, தனது நண்பர்களிடம், நான் விழாவுக்குப் போகப் போவதில்லை என்று கூறிவிட்டாராம்.

    இருந்தாலும் மத்திய அரசின் அழைப்பு இது. தம்மை மதித்து அனுப்பப்பட்ட இந்த அழைப்பை மதிக்கும் விதத்திலேயே தன் மகள் ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தாராம். அவரும் விழாவில் பங்கேற்றுவிட்டு, விருந்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினாராம்.

    "தன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என எப்போதும் தமிழ் மக்களைக் குறிப்பிடும் ரஜினி, தமிழர் உணர்வுகளுக்கு மாறாக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. எனவே ராஜபக்சே விருந்தினராக வரும் ஒரு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று கனவு கூடக் காண வேண்டாம்," என்றார் நம்மிடம் பேசிய ரஜினியின் நண்பர் ஒருவர்.

    அது போதும்!

    English summary
    Why Rajini skipped the swearing in ceremony of Narendra Modi? Here are the two important reasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X