கமலுக்கும் நாயகி நயனதாரா?

செவ்வாய்க்கிழமை, ஜூலை 29, 2008, 17:35 [IST]
மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜோலிடம் தேதிகள் கேட்டிருந்த கமல், இப்போது அந்த எண்ணத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, நயனிடம் தேதிகள் கேட்டுள்ளாராம்.

மர்மயோகியில் நடிக்கப்போவதாக மூன்று நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. காஜோல், ராணி முகர்ஜி மற்றும் பத்மப்ரியாதான் அந்த மூவரும். இவர்களில் முதல் இருவரும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால் பத்மப்ரியா மட்டும், இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகவும், கமல்ஹாசனே போனில் தன்னிடம் பேசியதாகவும் கூறி வருகிறார்.

இந்நிலையில், இன்றைக்கு தென்மாநில மொழிப் படங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நாயகியான நயன்தாராவிடம் மர்மயோகி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குமாறு உலகநாயகன் கேட்டுக் கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது அஜீத், விக்ரம், கார்த்தி, தனுஷ்... என பெரிய ஹீரோக்களின் படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா, இன்னமும் தன் பதிலைச் சொல்லவில்லையாம். எனினும் ஏகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், கமலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் அவருக்கு சிரம்மிருக்காது என மர்மயோகி வட்டாரம் தெரிவிக்கிறது.

ரஜினியுடன் இதுவரை 3 படங்களில் நடித்துவிட்ட நயன்தாரா, கமல்ஹாசனுடன் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அந்தக் குறை இந்தப் படத்தில் தீர்ந்துவிடும் எனப் புல்லரிக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.

அப்ப, நயன் இனி உலக நாயகி?!
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST