'அழைக்கிறேன் என்றார்... அழைப்பாரா தெரியலையே'...., ஏதோ படத்தின் பாட்டு வரியோ என நினைக்க வேண்டாம். பத்மப்ரியா அடிக்கடி முணுக்கும் வார்த்தைகள் இவைதான்.
தசாவதாரத்துக்குப் பிறகு கமல்ஹாசன், இயக்கி நடிக்கும் மர்மயோகியின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. பிரமிட் சாய்மிரா ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்.
ஹேமமாலினி, த்ரிஷா, ஷ்ரியா என இதற்கு ஏற்கெனவே நாயகிகளும் முடிவாகிவிட்ட நிலையில், நான்காவதாக பத்மப்ரியாவும் ஜோடி சேரப் போவதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்த பேச்சுக்கள் தொடங்கிய போதே, கமல் பத்மப்ரியாவிடம் பேசியிருந்தாராம். தொடர்ந்து 90 நாட்கள் கால்ஷீட் தர முடியுமா என்றும் கேட்டுக் கொண்டாராம். பத்மப்ரியாவும் உடனே தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் உடனே கால்ஷீட் தரமுடியாத நிலை அவருக்கு. மம்முட்டியுடன் தற்போது நடித்து வரும் பழஸிராஜா படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் தன்னால் மர்மயோகிக்கு வர முடியும் எனக் கூறி, கொஞ்சம் அவகாசம் கேட்டாராம்.
அதை கமல்ஹாசனும் அப்போதைக்கு ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்பிறகு மர்மயோகியின் நாயகிகள் என ஷ்ரேயா மற்றும் த்ரிஷாவின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது பழஸிராஜா படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. கமலிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தவருக்கு தொடர்ந்து ஏமாற்றம்...
அதனால்தான் 'அவர் அழைப்பாரா...' என ஏக்கத்தோடு பாடிக் கொண்டிருக்கிறது இந்தக் கேரளக் கிளி!