சனா பாதி - சினேகா மீதி

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2008, 18:03 [IST]
சிலம்பாட்டம் படத்தில் சனா கானுக்கும், சினேகாவுக்கும் சம அளவில் கேரக்டர்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளனவாம். இந்த இரண்டு கேரக்டர்களுடனும், எப்படி சிம்பு தொடர்புப்படுகிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

சிம்பு வித்தியாசமான கதையில் நடித்து வரும் படம் சிலம்பாட்டம். கேமராமேன் சரவணன் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்புவுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் சனா கான், இன்னொருவர் சினேகா.

முதல் பாதியில் சனா கானும், சிம்புவும் வருகிறார்கள். 2வது பாதியில் சினேகா என்டர் ஆகிறார்.

கேரக்டர்களில் குழப்பம் ஏற்படாத வகையில் அழகாக பிரித்து வைத்து விட்டனராம். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும், சிம்புவுக்கும் இடையிலான தொடர்பும் அழகாக கோர்க்கப்பட்டிருக்கிறதாம்.

சனா கானை விட சினேகாவின் கேரக்டரில்தான் படத்தின் ஜீவனே இருக்கிறதாம். எனவே சினேகா போர்ஷன் சம்பந்தப்பட்ட எந்த செய்தியும் லீக் ஆகி விடாமல் படு ரகசியமாக வைத்திருக்கின்றனராம்.

இடையில் படத்தின் இயக்குநருக்கும், சிம்புவுக்கும் இடையே லேசாக உரசல் ஏற்பட்டுள்ளதாம். இருந்தாலும் அத்தனை பேருமாக சேர்ந்து பேசி அதை சரிக்கட்டி விட்டனராம்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST