சென்னை அழகி லேகா வாஷிங்டன் பாலிவுட்டுக்கு வண்டி ஏறுகிறார்.

புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009, 17:59 [IST]
{image-18-lekha-washington200.jpg tamil.oneindia.in}
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை என பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோலிவுட் நோக்கி பாய்ந்தோடி வந்த நாயகிகள் இப்போது பாலிவுட் பக்கம் பார்வையைத் திருப்பி விட்டுள்ளனர்.

எல்லாம் ஆசின் அங்கு போட்ட சத்தாய்ப்பான வெற்றிதான் காரணம்.

ஆசினுக்கு முன்பு ஜெனீலியா மும்பை போனார். ஆனால் கஜினி மூலம் ஆசின் பெற்ற மெகா வெற்றி பல நாயகிகளுக்கும் பாலிவுட் கனவை அதிகரித்து விட்டது.

தற்போது பாலிவுட் பக்கம் சதா, பத்மப்ரியா ஆகியோர் உலா வந்து கொண்டுள்ளனர். இந்த வரிசையில் லேகா வாஷிங்டனும் இணைகிறார்.

ஜெயம்கொண்டானில் நடித்த லேகாவுக்கு தற்போது தமிழில் சிறப்பான வாய்ப்புகள் இல்லை. இதனால் தனது பார்வையை பாலிவுட்டுக்குத் திருப்பி விட்டுள்ளார் லேகா.

யுடிவி நிறுவனத்தின் ஸ்பாட்பாய் புரடக்ஷன்ஸ் தயாரிக்க, உருவாகும் பீ்டடர் கயா காம் சே படத்தில் ராஜீவ் காந்தல்வாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லேகா.
  Read:  In English 
இந்தியாவில் இருந்தபடி இயங்கும் இங்கிலாந்து இயக்குநர் ஜான் ஓவன்ஸ் இப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் தற்காப்புக் கலை மற்றும் பிற சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதால் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளாராம் லேகா. அதாவது படம் அதிரடிப்படம் என்பது இதிலிருந்து புரியும்.

மார்ச் முதல் வாரம் கோவாவில் வைத்து படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST