கமலுடன் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா..?- அசின் ஏக்கம்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 13:46 [IST]
தசாவதாரத்தில் கிடைத்த மாதிரி கமலுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன், என்று அசின் கூறியுள்ளார்.

தமிழில் உச்சத்தில் இருந்தபோது, வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பைக்குப் போய் செட்டிலானவர் அசின். இப்போது இரண்டு மூன்று இந்திப் படங்களில் நடித்தாலும், தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

ரஜினியின் கோச்சடையானில் ஹீரோயின் உறுதி செய்யப்படாமல் இருந்த போது, ரஜினியுடன் நடித்தால் சந்தோஷப்படுவேன், வாய்ப்பு கிடைக்குமா? என்று ஒரு கல் விட்டுப் பார்த்தார். ஆனால் அங்கு தீபிகா படுகோன் வந்துவிட்டார்.

இந்த நிலையில், கமல் - ஷங்கர் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

இந்தப் படத்தில் அசின் நடிப்பதாக சிலர் 'கிளப்பிவிட்டிருந்தனர்.' ஆனால், அது வெறும் புரளி என அசின் தெரிவித்துள்ளார் (இவரே சொல்லியிருப்பாரோ!).

அவர் மேலும் கூறுகையில், "தசாவதாரத்தில் கமலுடன் நடித்தது மறக்கமுடியாதது. மீண்டும் அதுபோன்ற வாய்ப்பு வந்தால் மகிழ்வேன்.இப்போதைக்கு பேஸ்புக்கில் 'டச்'சிலிருக்கிறோம்", என்றார்.
English summary
Asin denied reports about her role in yet to be announced Kamal - Shankar's project. 'But I'm ready to do any role in the movie, if they offer me', says the actress.
User Comments
kundaan saddi 16 Feb 2012 01:10 am
அசின் ஒரு நல்ல நடிகை. அழகானவர் . ஆனால் எல்லோரையும் முந்திக்கொண்டு சிறிலங்காவுக்கு போய் அங்கு பேட்டிகொடுத்ததும், பொற்கிழி பெற்றதும், அனைத்து தமிழர்களினதும் வெறுப்புக்கு ஆளானார் . மீண்டு வந்ததும் தவறுக்கு வருந்தியிருக்கலாம் ஆனால் அதை செய்யாமல் இருந்ததால் அவர்மீதான வெறுப்பு தொடர்கிறது. சிலருக்கு அதிஸ்டம் வருவதுபோல துரதிஸ்டம் தந்தியில் வந்துவிடுகிறது
Thagappan Yappaa 14 Feb 2012 06:23 pm
ஏற்கெனவே முடிச்சவர்களை கமல் தொடுவதில்லை!
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST