நித்யா மேனன் படங்களுக்கு கேரளத்தில் தடை- நிஜமா, பப்ளிசிட்டி ஸ்டன்டா?

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 12:45 [IST]
நடிகை நித்யா மேனன் நடித்த படங்களுக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையாள விநியோகஸ்தர்கள் சங்கம் இந்தத் தடையை அறிவித்துள்ளது.

தத்சமயம் ஒரு பெண்குட்டி என்ற படப்பிடிப்பின் போது, சில தயாரிப்பாளர்கள் நித்யா மேனனை சந்தித்து டிஸ்கஷனுக்கு அழைத்துள்ளனர். அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டாராம் நித்யா மேனன்.

இதனால் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தந்தனர். நித்யா மேனன் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது என தயாரிப்பாளர் சஙகமும் அறிவித்தது.

ஆனாலும் நித்யாவை மலையாள நடிகர்கள் சங்கம் அம்மா ஆதரித்தது. எனவே பேச்சுலர் பார்ட்டி, உஸ்தாத் ஓட்டல் ஆகிய இரு படங்களில் ஒப்பந்தம் செய்தனர்.

இந்த நிலையில் இப்போது, நித்யா மேனன் படங்களுக்கு கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து மலையாள திரையுலகினர் சிலர் கூறுகையில், "இது முழுக்க முழுக்க பப்ளிசிட்டி ஸ்டன்ட்தான். காரணம் அப்படி ஒரு பெரிய பிரச்சினையே அல்ல இது. நித்யா மேனனின் தத்சமயம் ஒரு பெண்குட்டி படத்துக்கு விளம்பரம் தேடவே இந்த வேலை. சீக்கிரமே நித்யா மீதான தடையை தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் சங்கங்கள் விலக்கிக் கொள்ளும், என்றனர்.

நித்யா மேனன் தமிழில் '180' என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Two of Nithya Menen’s films, Bachelor Party and Ustad Hotel, are facing ban by the distributor’s association in Kerala. This has come after the Producers’ Association decided to impose a ban on her, after she refused to talk to some of the producers who had gone to meet her at the location of Tatsamayam oru penkutty.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST