பூனம் பாண்டேவிடமிருந்து ஐபோனை திருடிய பலே கும்பல்!

திங்கள்கிழமை, பிப்ரவரி 20, 2012, 14:16 [IST]
மும்பை: கவர்ச்சிகரமான மாடல் அழகியும், அவ்வப்போது பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்துபவருமான பூனம் பாண்டேவிடமிருந்து விலை உயர்ந்த ஐபோனை அவரது காரிலிருந்து ஒரு கும்பல் திருடிச் சென்றுள்ளது. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம் பாண்டே.

இதுகுறித்து ஓஷிவாரா போலீஸ் நிலைய காவலர்கள் கூறுகையில், மேற்கு அந்தேரியில் உள்ள ஆதர்ஷ் நகர் சிக்னலில் பூனம் பாண்டேவின் கார் டிராபிக் ஜாமில் மாட்டி நின்றுள்ளது. அப்போதுதான் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் படு நூதனமாக பாண்டேவை ஏமாற்றி அவரது ஐபோனை தூக்கிக் கொண்டு பறந்துள்ளனர்.

இதுபோன்ற திருட்டு சமீப காலமாக மும்பையில் அதிகரித்து வருகிறது. பாண்டேவிடமிருந்து ரூ. 45,000 மதிப்புள்ள ஐபோன்4-ஐ அக்கும்பல் திருடிச் சென்றுள்ளது.

தனது நண்பருக்குச் சொந்தமான வேகன் ஆர் காரில் பாண்டே அப்போது பயணித்துள்ளார். காரேகானிலிருந்து கோகிலாபென் மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருந்தபோதுதான் இந்த திருட்டு நடந்துள்ளது.

படு நூதனமாக இந்த திருட்டை அந்தக் கும்பல் செய்துள்ளது. அதாவது பாண்டே காருக்கு அருகில் வந்து நின்ற அந்த நபர்கள், கார்க் கதவை தட்டியுள்ளனர். கண்ணாடியை பாண்டே இறக்கி விட்டு என்ன என்று கேட்டபோது காருக்குப் பி்ன்னால் இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளைக் காட்டி அதில் இருந்தவர்கள் உங்களை திட்டுவதாக பேசுவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து பாண்டே என்னவோ, ஏதோ என்று போய்ப் பார்த்துள்ளார். அதைப் பயன்படுத்திக் கொண்டு காரில் இருந்த ஐபோனை தூக்கிக் கொண்டு பறந்து விட்னராம் அந்த திருடர்கள்.

பூனம் பாண்டே அந்த ஐபோனில் என்னென்னத்தைப் போட்டு வைத்திருக்கிறாரோ...

English summary
A motorcycle gang that has successfully robbed expensive mobile phones from cars on the move, made model and reality TV starlet Poonam Pandey its latest victim on Friday night. According to cops, members of the gang accost motorists stuck at the busy Adarsh Nagar signal in Andheri (West), and enact a charade to distract them, before grabbing their phones and fleeing.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST