ரஜினியின் கோச்சடையானுக்காக ரேஸ் 2 படத்திலிருந்து நான் விலகியதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. ரேஸ் 2 படத்துக்கு முன்பே நான் ராணாவுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டேன். மேலும் நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டார்கள் ரேஸ் படத் தயாரிப்பாளர்கள்.இதற்கு நானா பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார் தீபிகா.
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே ரஜினியுடன் 'ராணா' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானார். படத் தொடக்க விழாவிலும் பங்கேற்றார். ரஜினிக்கு உடல் நலம் குன்றியதால் அந்தப் படம் தள்ளிப்போனது. ரஜினி உடல் நலம் தேறியதும் ராணாவுக்குப்பதில் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தீபிகா படுகோனே புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் ரேஸ்-2 இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி இந்த படத்தை தயாரிக்கிறார். ஒப்புக் கொண்டபடி எனது படத்தில் நடிக்காமல் வேறு படங்களில் நடிக்கப் போய்விட்டார் தீபிகா என அவர் மும்பை தயாரிப்பாளர் மற்றும் ஆர்டிஸ்ட் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த புகார் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் தீபிகா படுகோனேக்கு தகவல் தெரிவித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டது.
ரஜினி படத்தில் நடிப்பதற்காக இந்திப்படத்திலிருந்து தீபிகா படுகோனே விலகி விட்டதாகவும், புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து தீபிகா படுகோனே அளித்த பேட்டியில், "ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து நான் விலகவில்லை.
ரஜினியுடன் நடிக்க ரொம்ப நாளைக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. 'ரேஸ்-2' படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பு நடத்தாமல் 18 மாதங்கள் தாமதம் செய்தனர். இதனால் என் கால்ஷீட் விரயமானது. இப்போது நான் வேறு படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளதை பிரச்சினையாக்குவது அவர்கள் தவறு.
என்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது. நான் விரைவில் பதில் அனுப்புவேன். தவறு என்னுடையதல்ல," என்றார்.