திருமணத்துக்குப் பிறகு நடிக்கமாட்டேன் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. திருமணத்துக்குப் பிறகும் நடிக்கப் போகிறேன், என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.
தோனி படத்துக்குப் பிறகு வெற்றிச் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் ராதிகா. அஜ்மல் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ராதிகா ஆப்தேவுக்கும் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனடிக்குக்கும் விரைவில் காதல் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வந்தன. அதை அவரும் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் சினிமாவை விட்டே ராதிகா விலகப் போவதாக வந்த செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், "எனக்கு விரைவில் திருமணம் ஆகும்... அல்லது தள்ளியும் போகலாம். ஆனால் அது என் சொந்த விஷயம்.
ஆனால் திருமணத்துக்குப் பிறகு நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை.
குறிப்பாக தமிழில் நிறைய படங்கள் செய்ய வேண்டும். வெற்றிச் செல்வன் வந்த பிறகு அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.











