twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்ப தான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்: ஹன்சிகா

    By Siva
    |

    சென்னை: காதல் முறிவுக்கு பிறகு தான் தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

    கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக இருந்த ஹன்சிகா சிம்புவை காதலிப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவரது மார்க்கெட் சற்று சரிந்தது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர்.

    காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகாவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    சந்தோஷம்

    சந்தோஷம்

    காதலில் இருந்தபோது சற்று கவலையாக சுற்றிக் கொண்டிருந்த ஹன்சிகா தற்போது குஷியாக காணப்படுகிறார். கேட்பவர்களிடம் முன்பை விட தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறாராம்.

    மார்க்கெட்

    மார்க்கெட்

    ஹன்சிகா விக்ரமுடன் ராஸ்கல், ஆர்யாவுடன் மீகாமன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது தவிர சில முன்னணி ஹீரோக்குளுடன் ஜோடி சேர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

    அம்மா மோனா

    அம்மா மோனா

    சிம்புவை ஹன்சிகா காதலித்தது அவரது தாய் மோனா மோத்வானிக்கு பிடிக்கவே இல்லை. இந்நிலையில் மகளின் காதல் முறிந்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் அவர் இந்த நல்ல செய்தியை முக்கிய இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களுக்கு தெரிவித்து வருகிறாராம்.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    ஹன்சிகாவின் அம்மா மோனா சில முக்கிய இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களிடம் என் மகளின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த நீங்கள் தான் உதவ வேண்டும் என்று கூறியுள்ளாராம். அவரது வேண்டுகோளை ஏற்று ஹன்சிகாவின் மார்க்கெட்டை சீர்படுத்தும் முயற்சியில் சில ஹீரோக்கள் இறங்கியுள்ளார்களாம்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    தனது மார்க்கெட் விரைவில் சீராகிவிடும் என்ற நம்பிக்கையில் ஹன்சிகா உள்ளாராம். அதனால் தான் அவர் அவ்வளவு மகிழ்ச்சியாக காணப்படுகிறாராம்.

    காதல் முறிவு

    காதல் முறிவு

    ஹன்சிகாவிடம் யாராவது காதல் முறிவு குறித்து கவலை தெரிவித்தால் நீங்க வேற முன்பை விட நான் தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறாராம்.

    English summary
    Hansika, whose love with Simbu has come to an end, is reportedly telling people that she is happier than earlier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X