twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹன்சிகா இப்போ ஹேப்பி!

    By Shankar
    |

    மனசின் மகிழ்ச்சி முகத்திலும் செயலிலும் எதிரொலிக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஹன்சிகா. காதல் சிக்கலிலிருந்து வெளிவந்த பிறகு அவர் ரொம்பவே மகிழ்ச்சியோடு இருக்கிறாராம்.

    அதிலும் எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று சிம்பு பிரஸ் ரிலீஸ் கொடுத்த பிறகு, ஹன்சிகாவின் வாழ்க்கையே வண்ணமயமாகிவிட்ட மாதிரி இருக்கிறதாம்.

    விளைவு... இப்போது நிற்க நேரம் இல்லாத அளவுக்கு தமிழ், தெலுங்கில் புதுப்புது வாய்ப்புகள். இதுவரை 9 புதிய படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வரும் ஹன்சிகாவுக்கு இந்த ஆண்டு மட்டுமே நான்கு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாம்.

    மான்கராத்தே, வாலு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சுந்தர் சியின் அரண்மனை, ஜெயப்பிரதாவின் உறவினர் சித்தார்த்துடன் உயிரே உயிரே, ஆர்யாவுடன் மீகாமன், விக்ரமுடன் பெயரிடப்படாத ஒரு படம் என தொடர்கிறது அவர் தமிழ்ப் படப் பட்டியல்.

    தெலுங்கில் இரண்டு பெரிய படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டிலுமே சோலோ ஹீரோயின் வேடம்.

    தொழிலில் அசுர வேக வளர்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கலும் தீர்ந்துபோன நிம்மதி போன்றவற்றால்.. தன் நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக சமீபத்தில் தன் சக நடிகையிடம் பகிர்ந்து கொண்டாராம் ஹன்சி.

    English summary
    Actress Hansika is happy now after distanced form Simbu's love.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X