ஹீரோயின் செய்திகள்
கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் - ஹீரோயின் நயன்தாரா!கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார்.இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது.தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், தரணி இயக்கிய ஒஸ்தி, விரைவில் வெளியாகவுள்ள விஷாலின்
கல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா?நடிகை சினேகா தனது திருமண செலவுக்காக பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது.அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும். இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். முதலில் காதல் குறித்து மௌனமாக இருந்து வந்த
குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனைஅடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து
தெலுங்கில் படுகவர்ச்சி காட்டும் தமன்னா!தெலுங்கில் படுகவர்ச்சியாக நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளாராம் நடிகை தமன்னா.ஏற்கெனவே தமிழில் பையா படத்துக்கு புடவையில் மழையில் நனைந்தபடி அடடா அடடா என ஒரு பாடல் பாடியிருந்தார்.இப்போது தெலுங்கில் ராம்சரணுடன் அவர் நடிக்கும் படம் ரச்சா. இதிலும் ஒரு மழைப் பாடல் காட்சி உண்டாம். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், இடுப்பில் ஒரு மெல்லிய துணி அணிந்து இந்தப் பாட்டுக்கு தமன்னா
உடம்பைக் குறைத்து, மீண்டும் நடிக்க வந்தார் வனிதா!கடந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை சர்ச்சைகளை பொதுவில் வைத்து பெரும் பரபரப்பு கிளப்பிய வனிதா விஜயகுமார் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.மாணிக்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகாவில் நடித்தார்.ஆனால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனதால், டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு
நடிகை அனுராதாவுக்கு கொலை மிரட்டல்-கமிஷனரிடம் புகார்சென்னை: கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டதால் கொன்றுவிடுவதாக மிரட்டல் வருகிறது என சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை அனுராதா புகார் தெரிவித்துள்ளார்.சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதா. தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்.நேற்று காலை அவர் சென்னை போலீஸ் கமிஷனர்
கோவை சாமியார் ஆசிரமத்தில் அமலா பால்!அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடிகைகளுக்கு அலாதி ஈடுபாடு.கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவதொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால்.இந்த ஆசிரமத்துக்குப் போய் வந்த பிறகு அந்த அனுபவம் குறித்துதான் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.இதுகுறித்து அமலா
ஒரே மாதிரி வேணாம்.. போரடிச்சிடும்!- இனியாஒரே மாதிரி வேடங்களில் நடித்தாலும், இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தாலும் சினிமாவில் போரடித்துவிடும் என்று கூறியுள்ளார் நடிகை இனியா. பாடகசாலை என்ற படத்தில் அறிமுகமானவர் இனியா. வாகை சூடவா படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். மௌன குரு படத்திலும் நல்ல பெயர்.ஆனால் இரண்டிலுமே இவர் குடும்பப் பாங்காக நடித்திருந்தார். அடுத்து நடிக்கும் பாரதிராஜா படத்திலும்
ஐம்பது வயசாயிடுச்சி... இனி வேணாம்! - தீபாஎனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. இனி நடிப்பு வேணாம்னு ஒதுங்கிட்டேன். என் மகன், பேரப்பிள்ளைகளை நடிக்க வைப்பேன், என்கிறார் முன்னாள் நடிகை தீபா.ரஜினியுடன் ஜானி, பாக்யராஜுடன் முந்தானை முடிச்சு உள்பட ஏராளமான படங்களில் கலக்கியவர் தீபா. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் கவர்ச்சி நாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர். பார்க்க
ரீமா கல்யாணத்தில் ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ்!ரீமா சென் கல்யாணத்தில் தமிழ் நடிகை ஸ்ரேயா நடனமாடினர். நடிகைகள் சோனியா அகர்வால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.கடந்த மார்ச் 11-ம் தேதி ரீமா சென்னுக்கும் - ஹோட்டல் அதிபர் ஷிவ் கரன் சிங்குக்கும் திருமணம் நடந்தது.இதில் பங்கேற்க ரீமா சென்னின் நெருங்கிய தோழிகள் ஸ்ரேயா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.வட இந்திய திருமணங்களில்
அழகுச் சிலை மாதுரிக்கு லண்டனில் மெழுகுச் சிலைபாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்தார்.பாலிவுட்டின் ராணியாக இருந்தவர் நடிகை மாதுரி தீக்ஷித்(44). அவர் நடனமாடினால் அனைவரும் கண்கொட்டாமல் பார்ப்பார்கள். அத்தகைய வசீகரம் உள்ளவர். மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்ற அவர் தற்போது குடும்பத்துடன்
தமிழ் இயக்குனர்களை தவிக்கவிடும் பூஜாநடிகை பூஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பும் இயக்குனர்களை அவர் தவிக்க விடுகிறாராம்.நடிகை பூஜா சிங்கள படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு கோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்த இயக்குனர் பாலாவின் எரியும் தணல் படத்தில் நடிக்கவிருக்கிறார். பாலாவின் நான் கடவுள் படம் பூஜாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு: நயன்நடிகை நயன்தாராவுக்கு பிடித்த நிறம் கருப்பு. ஷூட்டிங் இல்லையென்றால் அம்மணி கருப்பு நிற உடைகளையே விரும்பி அணிகிறார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்கிறார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவுடனான திருமணம் நின்று அவரைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. இத்தனை நாட்களாக சினிமாவைவிட்டு விலகியிருந்த அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க
எந்த ஜென்மத்திலும் அப்பாவுடன் பேசமாட்டேன்: பானுநடிகை பானு தனது அப்பாவைவிட்டு பிரிந்துவிட்டாராம். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.தாமிரபரணி படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பானு. முதல் படத்தில் கும்முனு வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் காற்றிறங்கிய பலூனாகி விட்டார். குறிப்பாக ஆர்கேவுடன் இணைந்து நடித்தபோது படு மெல்லிசாக காணப்பட்டார். இப்போது முன்பை விட மேலும் உடல்
நடிகை ரீமா சென் - ஷிவ்கரன் சிங் திருமணம் நாளை டெல்லியில் நடக்கிறது!தனது நீண்ட நாள் காதலர் ஓட்டல் அதிபர் ஸிவ் கரன்சிங்கை நாளை மணக்கிறார் பிரபல நடிகை ரீமா சென்.மின்னலே படம் மூலம் தமிழில் அறிமுகமாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். கொல்கத்தாவை சேர்ந்த இவர், தெலுங்கு, வங்காளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்தான் கடைசிப் படம். ராஜபாட்டையில்
