twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலம் போட்டு, கரும்பு கடித்து, உரியடித்து பொங்கல் கொண்டாடிய நமீதா!

    By Shankar
    |

    சென்னை: நடிகை நமீதாவை சினிமாக்காரர்கள் ஈஸியாக சந்திக்கலாம்... ஆனால் ரசிகர்கள்...?

    அவர்களுக்கு இதோ ஒரு வழி... கொஞ்சம் வலிமிக்க வழிதான்... இருந்தாலும் முயற்சிக்கலாம்.

    ரத்ததானமோ, உடல்தானமோ செய்தவராக இருந்தால், அவர்கள் தாராளமாக நமீதாவைச் சந்திக்க முடியும்.

    பொங்கல் விழா

    பொங்கல் விழா

    சமீபத்தில் சென்னை மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில், பொங்கல் வைத்து, கரும்பு கடித்து கொண்டாடினார் நமீதா. நிகழ்ச்சியில் காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை மாணவ மாணவியருடன் அமர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.

    நமீதா நடனம்

    நமீதா நடனம்

    மாணவ மாணவியரின் சுற்றுப்புறச்சூழல் குறித்த பட்டிமன்றம், மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மிகவும் ரசித்துப்பார்த்த நமீதா, திடீரென மேடையில் ஏறி அவர்களுடன் தானும் நடனமாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவ- மாணவிகள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், நலிவடைந்தவர்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த உதவிப் பொருட்களை நமீதா ஏழை மக்களுக்கு வழங்கினார்.

    ரத்ததானம்

    ரத்ததானம்

    மாணவர்கள் மத்தியில் பேசிய நமீதா, இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார் பாதி மாணவர்கள் செய்திருந்தனர். இவ்வளவு பேர் செய்துள்ளீர்களா என ஆச்சர்யப்பட்ட நமீதா அவர்களை பாராட்டினார். மேலும் உடல் தானம் எத்தனை பேர் செய்துள்ளீர்கள் என்பதற்கு ஏறக்குறைய நூறு பேர் செய்திருந்ததாக கை உயர்த்தினர். இது நல்ல மாற்றம். மாணவர்கள் இவ்வளவு சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டிற்குரியது. வரும்காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்பதோடு சம்பாதிப்பதோடு நமது சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வேண்டும். அதை இந்த கல்லூரில பார்க்கிறேன். மகிழ்கிறேன் என்றார்.

    என்னைப் வந்து பாருங்க

    என்னைப் வந்து பாருங்க

    ரத்ததானம் அல்லது உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதை செய்ததற்கான சான்றிதழோடு வந்தால் போதுமானது. இதன் மூலம் பல உயிர்கள் நீண்டு வாழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று பேசினார்.

    பொங்கல் வைத்தார்.. கரும்பு கடித்தார்..

    பொங்கல் வைத்தார்.. கரும்பு கடித்தார்..

    சம்பந்தப்பட்ட மாணவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரைச் சொல்லி அழைத்ததை ஒரு தடவை தான் கேட்டிருப்பார் ஆனால், ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

    நாட்டுப்புற கலைஞர்களையும் அவ்வா மனதாரப்பாராட்டி அவரையும் புளாங்கிதம் அடைய வைத்தார். பேராசியர்கள் , கல்லூரி அலுவர்கள் மட்டுமின்றி அங்கு உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண்களையும் அவரே அழைத்துத் தன்பக்கத்தில் நிற்க வைத்து நலம் விசாரித்து படம் எடுத்துக் கொள்ள வைத்தார்.

    கோலம் போட்ட நமீ

    கோலம் போட்ட நமீ

    முன்னதாக கல்லூரிக்குள் நுழைந்த நமீதாவை மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோலப்போட்டி நடந்தது, நமீதாவும் கோலம் போட்டு மகிழ்ந்தார். மாணவியர் வைத்த பொங்கலை ருசிபார்த்து சிறப்பாகப் பொங்கல் வைத்தவரிடம் எப்படி இவ்வளவு சுவையாக வைத்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

    உரி அடித்தார்..

    உரி அடித்தார்..

    உரியடிக்கையில் கண்களைக் கட்டிக்கொண்டு ஏமாற்றாமல் அவர் சரியாக அடித்தது அங்குள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தியது. நமீதா கலந்து கொண்ட பொங்கல் விழா நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 16 ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளுள் ஒன்றாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.

    English summary
    Recently actress Namitha has celebrated this pongal with students at a private college.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X